Global Passport Index : உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் பாஸ்போர்ட்டிற்கு 66வது இடம் கிடைத்திருக்கிறது. விசா ஃப்ரீ பாஸ்போர்ட்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 66 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க இயலும்.
முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியாகும். 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வகையில் அந்த நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களாக இருக்கின்றன.
மேலும் படிக்க : இந்தியர்களுக்கான டாப் 5 விசா ஆன் அரைவல் நாடுகள்
Global Passport Index கடைசி மூன்று இடங்கள் பிடித்த நாடு
ஆஃப்கானிஸ்தான் 91வது இடம் பிடித்திருக்கிறது. பாகிஸ்தான் மாற்றும் ஈராக் நாடுகள் 90வது இடம் பிடித்திருக்கிறது. சிரியா 88வது இடத்திலும், சோமாலியா 87வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியாவிற்கு ஃப்ரீ விசா தரும் ஒரே ஒரு ஐரோப்பிய நாடு
ஹென்லே மற்றும் பார்ட்னெர்ஸ் என்ற நிறுவனத்தின் கணக்கெடுப்பு ஆகும். ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம், அல்லது ஒருவர் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
விசா ஆன் அரைவல், எலெக்ரானிக் ட்ராவல் அத்தாரிட்டி ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.