Husband arrested for getting wife killed by snake in Kerala police did postmortem for snake : கேரளத்தின் கொல்லம் பகுதியில் வசித்து வருபவர், வங்கி பணியாளர் சூரஜ். அவருக்கு உத்ரா என்ற பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணை பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற இரண்டு முறை பாம்புகளை வாங்கியுள்ளார் சூரஜ். பிப்ரவரி ரூ. 5000க்கு வாங்கிய பாம்பினை ஏவி கொலை முயற்சி செய்த போது, உத்ரா பிழைத்துக் கொண்டார்.
ஆனால் மே 7ம் தேதி பாம்பு ஒன்றை ஏவி அவரை கொலை செய்துள்ளார் சூரஜ். இது தொடர்பாக உத்ராவின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாராணை நடத்தப்பட்டதில் குற்றத்தை ஒப்புக் கொண்டார் சூரஜ். சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு வழங்கிய நபர் என இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
உத்ராவை கடிக்க பயன்படுத்த பாம்பை, உத்ராவின் உறவினர்கள் பிடித்து அடித்தே கொன்று புதைத்துவிட்டனர். ஆனால் அந்த பாம்பின் உடற்கூறு ஆய்வு முக்கியம் என்று உணர்ந்த காவல்துறையினர், புதைத்த பாம்பை மீண்டும் எடுத்து, உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். பாம்பின் உடல் அழுக துவங்கியிருந்தாலும், பாம்பின் பற்கடி ஆதாரம் ஆகியவை மிகவும் முக்கியமாக இருக்கின்ற காரணத்தால் இந்த ஆய்வுக்கூறு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
ஆரம்ப கட்ட விசாரணையில் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டது கருமூர்க்கன் ரக பாம்பு என்று தெரிய வந்துள்ளது. இந்த பாம்பின் உடலில் இருக்கும் விஷமும், உத்ரா உடலில் இருக்கும் விஷமும் ஒன்று தானா, பாம்பின் பல் எவ்வளவு தூரம் உத்ராவின் உடலில் இறங்கியது என்பது போன்ற முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள இது பயன்படுத்தப்பட்டுள்ளது.