லடாக் எல்லை மோதல்: சிறப்பு பிரதிநிதிகள் வழி பேச்சுவார்த்தைக்கு இந்தியா பரிசீலனை

India China Border Dispute : இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் நடைமுறையின் (எஸ்.ஆர் மெக்கானிசம்  ) கீழ் தீர்வு கான இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.

Shubhajit Roy , Deeptiman Tiwary

India China Special Representative Mechanism:  எல்லைப் பகுதியில் சீனாவுடனான ஏற்பட்ட பதட்ட சூழல் எட்டு வாரங்களை கடந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் நடைமுறையின் (எஸ்.ஆர் மெக்கானிசம்  ) கீழ் தீர்வு கான இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.

இதன் கீழ், இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகரும், சீனாவின் வெளிவிவகார அமைச்சருமானா வாங் யி அவர்களை சந்தித்து பேசலாம். எல்லையில் பதட்டங்களைத் தணிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது.

 

கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட பதட்டங்களை படிப்படியாக குறைப்பதற்காக, கடந்த ஜூன் மாதம் 30ம் தேதியன்று இரு நாடுகளுக்கு இடையேயான படைப்பிரிவு கமாண்டர்கள் மத்தியில் 3வது கட்ட  பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐந்து நாட்களுக்குப் பிறகு, தனது உரிமைக்கோரல் தொடர்பான வாதத்தில் இருந்து பின்வாங்குவதற்கான சிறிய அறிகுறிகள் தென்படுவதால், சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை  நடைமுறையை இந்தியா கையில் எடுத்துள்ளது.

3வது கட்ட  பேச்சுவார்த்தையின் கீழ், இரு தரப்பினரும் தங்களது படை வீரர்களையும், எல்லை கட்டமைப்புகளையும் நீக்க வேண்டும். நீக்குதல் சரிபார்ப்பு பணி ஜூலை 5 ஆம் தேதி நடத்தப்படும்.  “இந்தியா-சீனா எல்லை மோதல் பகுதியில், சில குறிப்பிட்ட இடங்களில் இரு நாடுகளைச் சேர்ந்த இராணுவக் குழுக்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்” என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

“இதுதொடர்பான விரிவான அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் கால்வான் பகுதியிலாவது, குறிப்பிடத்தக்க அளவிலான படைக்குறைப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை சீனா துருப்புகள் அகற்றியதற்கானசான்றுகள் உள்ளன ” என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இருப்பினும், எல்லைப் பகுதியில் ஏற்படும் முன்னேற்றங்கள் ‘மிகவும் கசப்பானதாக உள்ளது… விரும்பியபடி இல்லை” என்றும் கூறினார்.

“ பணிகள் தாமதமாக நடக்கின்றது. இது திட்டமிட்டு செய்யப்படுகிறதா என்று எங்களுக்குத் தெரியவில்லை. கடந்த சில நாட்களாக, கல்வான் பள்ளத்தாக்கில்  வானிலை சிறப்பாக இல்லை. கால்வான் நதி  நிரம்பி ஓடுகிறது. இதனால், பொதுவாக இங்கு பணிகள் தாமதமாக நடைபெறும். இருப்பினும், இங்கு  சில குறைந்தபட்ச  முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. நாங்கள் அதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கின்றோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும், பாங்காங் த்சோ ஏரியில்  ஃபிங்கர் 4 முதல் ஃபிங்கர் 8  இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில், கடந்த மே மாதத்தில் இருந்து சீனா ராணுவத்தின் ஊடுருவல்  அதிகரித்திருப்பது தொடர்பாக இதுவரை எந்த உடன்பாடும் கண்டறியப்படவில்லை. டெப்சாங் சமவெளியில் அமைந்திருக்கும் Y-ஜங்க்ஷன் (அ) பாட்டில்னெக் எனும் பகுதியில் சீனா இராணுவக் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது கவலை அளிக்கிறது. பேச்சுவார்த்தைகளின் தன்மைகள் பொருத்து, உறுதியான உடன்பாடுகள் எட்டப்படும், ”என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவு அமைச்சர் என்ற ரீதியில் வாங் யி உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சிறப்பு பிரதிநிதிகள் நடைமுறையை இந்தியா முன்னேடுக்கிறது.

எல்லையில் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வை உருவாக்கும் நோக்கில், உயர் மட்டத்திலான பேச்சு வார்த்தையை தொடர சிறப்பு பிரதிநிதிகள் நடைமுறை புதுடெல்லிக்கு  நல்ல கருவியாக இருக்கலாம். ஏனெனில், வரிசைமுறை அமைப்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சரை விட சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகர் பதவி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இந்தியாவில், ஜெய்சங்கர், அஜித் தோவல் இருவருக்கும்  கேபினட் ரேங்க் என்ற ஒரே மட்டத்தில் தான் உள்ளனர்.

2017ம் ஆண்டு வரை, சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகரும், சீனாவின் வெளியுறவு அமைச்சரும் வெவ்வேறு நபர்களாக  இருந்து வந்தனர். இருப்பினும், 2018ம் ஆண்டு முதல், இந்த இரண்டு பதிவையையும் ஒரே நபர் தான் வகித்து வருகின்றனர்.

2017 ஆம் ஆண்டில், டோக்லாம் எல்லை பதட்டத்தின்போது, சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகராகவும், சீனாவின் எல்லை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியுமாகவும்  யாங் ஜீச்சி பதவி வகித்தார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக  வாங் யி இருந்தார். இதன் மூலம், சீன அமைப்பில் வெவ்வேறு நபர்களை அணுகக்கூடியதாக வாய்ப்பு இருந்ததால், உடன்படிக்கை ஏற்படுத்துவது சற்று எளிதாக அமைந்தது.

2018ல் வாங் யி,  அரசு ஆலோசகராகவும், எல்லை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியுமாகவும் பதவியேற்றதை அடுத்து,சீனாவின் சக்திவாய்ந்த நபராக வாங் யி கருதப்படுகிறார்.

இதுதான், புது டெல்லியின் நிலைமையை மேலும்  சிக்கலாக்குகிறது.

எவ்வாறாயினும்,  எல்லை மோதல்  தொடர்பான பேச்சுவார்த்தையைக்  உயர் மட்டத்தில் கொண்டு செல்லப்படுவதால் (சீனாவின் கண்ணோட்டத்தில்)  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்னெடுத்து செல்லும் சிறப்பு பிரதிநிதிகள் நடைமுறையை செயல்படுத்த புதுடெல்லி முனைகின்றது.

இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே 22-வது சுற்றுப் பேச்சுவார்த்தை கூட்டம், புதுடில்லியில் 2019 டிசம்பர் 21 அன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியா- சீனா எல்லை மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், ” நமது அண்டை நாடுகளுடன் எப்போதுமே ஒருங்கிணைந்தும், நட்புரீதியாகவும் நெருங்கிப் பணியாற்றியுள்ளோம். அவர்களின் மேம்பாடு மற்றும் நலனை எப்போதுமே விரும்பியுள்ளோம். எப்போதெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், இந்த வேறுபாடுகள் பிரச்சினையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். யாரையும் நாம் தூண்டிவிட்டதில்லை. எனினும், நமது நாட்டின் நல்லிணக்கம் மற்றும் இறையாண்மையில் சமரசம் செய்து கொண்டதில்லை. தேவைப்படும்போதெல்லாம், நமது பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம். நாட்டின் நல்லிணக்கம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் உறுதிப்படுத்துவதற்கு நமது திறமையை நிரூபித்துள்ளோம் ” என்று தெரிவித்தார்.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India china special representative mechanism galwan de escalation india china faceoff

Next Story
கொரோனா: நாள் ஒன்றுக்கு ரூ.1.19 லட்சம் கட்டணம் – தனியார் மருத்துவமனை மீது அரசு மருத்துவர் புகார்coronavirus, tamil nadu coronavirus daily report, tamil nadu covid-19 positive cases today, கொரோனா வைரஸ், தமிழகத்தில் இன்று 4231 பேருக்கு கொரோனா, tamil nadu coronavirus death, covid-19 cases increase in south districts, coronavirus, latest coronavirus news updates, coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com