சாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது! – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

இந்த நிகழ்வு காலை 6 மணிக்கு துவங்கியது. க்ளைமேட் ஆக்சன் என்ற தீமில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

International Yoga Day 2019 PM Narendra Modi Speech
International Yoga Day 2019 PM Narendra Modi Speech

International Yoga Day 2019 PM Narendra Modi Speech : சர்வதேச யோகா தினம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறாது. யோகா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் பொதுமக்களுடன் இணைந்து யோகாவில் ஈடுபடுவது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம்.

மேலும் படிக்க : சர்வதேச யோகா தினம் 2019 : யோகாவில் சகலமும் கற்க, இந்த ’ஆப்’களையெல்லாம் டவுன்லோட் செய்யுங்க!

இம்முறை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் மத்தியில் யோகா பயிற்சி மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. நிகழ்ச்சியில் யோகாவின் நன்மைகள் குறித்தும் அதனால் உலகம் பெற்ற பயன் குறித்தும் உரை ஒன்றை நிகழ்த்தினார் மோடி.

அதில், மிகவும் பழமையான இந்த யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம், என அனைத்தையும் கடந்து அனைவருக்குமான ஒரு கலை.

யோகா என்பது ஒழுக்கம். உங்களின் வாழ்நாள் முழுவதும் அதை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஆரம்ப காலம் தொட்டே யோகா குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் விதைத்து வரும் மோடி, இம்முறை ஆற்றிய உரையில், இக்கலை காலம் காலமாக ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்கும் ஆரோக்கியத்தின் தேவையை வலியுறுத்தி கடத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

இந்த கலை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் அனைவரையும் சேர வேண்டும். ஏன் என்றால் அவர்கள் தான் உடல்நலக் குறைவால் அதிகம் பாதிப்படைகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரபாத் தாராவில் இந்த நிகழ்ச்சியை நடத்தியத்திற்கு காரணம் என்று வினவிய போது, இங்கு நிறைய மலைகள் இருக்கின்றன. இயற்கைக்கு மிக அருகில் இந்த இடம் உள்ளது என்று கூறினார்.  இந்த நிகழ்வு காலை 6 மணிக்கு துவங்கியது. க்ளைமேட் ஆக்சன் என்ற தீமில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளின் முக்கிய தொகுப்பு

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: International yoga day 2019 pm narendra modi speech yoga goes beyond colour caste creed is for everyone

Next Story
பாஜகவில் சங்கமித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள்! சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி!Telugu desam party rajya sabha mps joined bjp chandrababu naidu - பாஜகவில் சங்கமித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள்! சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com