Ananthakrishnan G
INX Media money laundering case : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம் தற்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறார். மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஐஎன்எஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 21ஆம் தேதி ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பு 23ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.
இதனை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை (26/08/2019) திங்களன்று நடைபெற்றது. நான்கு நாட்கள் கூடுதலாக காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது சிபிஐ. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ப.சிதம்பரம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துகள் வைத்திருப்பதாகவும் இருப்பதாகவும். 17க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மீதான விசாரணையின்போது ப.சிதம்பரம் தன் தரப்பிலிருந்து “வெளிநாட்டில் எந்த ஊரு வங்கி கணக்கும், சொத்தும் தனக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் 17 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சொத்துக் கணக்குகள் இல்லை” என்பதையும் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். கடந்த மூன்று முறை சிபிஐ நடத்திய விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளை முறையாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன?
அதனை நீதிமன்றம் பார்த்தால் சிபிஐயின் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் அமைதியாக இல்லை என்பதும் தெரியவரும் என்றும் அவருடைய வழக்கறிஞர் கபில்சிபல் அறிவித்துள்ளார். சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் வெளிநாடுகளில் 17 க்கும் மேற்பட்ட பினாமி வங்கிக் கணக்குகள் மூலமாக ஐ.என்.எக்ஸ் மோசடியில் பெற்ற பணத்தை பெற்றுக் கொண்டு சொத்துகள் வாங்கப்பட்டாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தான் சம்பாதித்த ஒவ்வொரு சொத்து விவரங்களையும் இந்த நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாகவும், பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் எந்த சொத்துகளும் தன்னுடையது இல்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ப. சிதம்பரம் வேறு எந்த நாட்டிலும் வங்கி கணக்குகளை தொடங்கும் பயன்படுத்தவும் இல்லை என்றும், வெளிநாடுகளில் இயங்கி வரும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஆதாயம் அடையவில்லை என்றும் அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
சிதம்பரத்திற்கு ஆதரவாக வழக்காடும் கபில்சிபல் நீதிமன்றத்தில் “கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, இந்த வருடம் ஜனவரி 1 மற்றும் 21ஆம் தேதி அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி” அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் விவகாரம் : நிதி ஆயோக் முன்னாள் தலைவரை விசாரணைக்கு அழைக்கும் சி.பி.ஐ
ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடும் மற்றொரு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், ப.சிதம்பரம் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றங்கள் அனைத்தும், அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் கீழ், அதாவது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ் வராது என்று வாதாடினார்.
முதல் தகவல் அறிக்கை மே 15, 2017 என்று காட்டுகிறது. ஆனால் நடைபெற்ற குற்றங்கள் 2007-2008 ஆண்டுகளை மையமாக கொண்அது. ப.சிதம்பரத்தின் மீது ஐ.பி.சி. 420, 120பி, மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(1) (டி) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2008ம் ஆண்டுக்கான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த பிரிவுகள் இல்லை. ஜூன் 1, 2009ம் ஆண்டுக்கு பின்பே இந்த பிரிவுகள் இணைக்கப்பட்டன என்று கூறினார் மனு சிங்வி.
நீங்கள் ஒரு மனிதரை ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவராக கட்டமைக்க முயற்சி செய்கின்றீர்கள். குற்றத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்காகவே அமலாக்கத்துறை காவலில் எடுத்து தான் விசாரிக்க வேண்டும் என்று என்று கூறுகிறார்கள் என்று மனு சிங்வி கூறியதற்கு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மறுப்பு தெரிவித்தார். மேலும் குற்றங்களை ஒப்புவிக்க ஒன்றும், காவல் விசாரணை கேட்கவில்லை என்று கூறினார். ஆனாலும் சிங்வி “ஆம்.. அதைத்தான் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நான் (சிதம்பரம்) இங்கு இருக்கும் போது நீங்கள் எப்படி நான் (சிதம்பரம்) அமைதியாக இருக்கின்றேன் என கூற முடியும். நீங்கள் விசாரணைக்கு அழைத்த போது எல்லாம் நான் (சிதம்பரம்) ஒத்துழைப்பு கொடுத்தேன். நீங்கள் விரும்பிய பதிலை நான் கூறவில்லை என்றால் அது விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அமைதியாக இருக்கின்றேன் என்று அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
2007-08 காலத்தில் நடைபெற்ற குற்றம் என்பதால், அதற்கான நிரூபணங்கள் எங்கே? வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எங்கே? அவையனைத்தும் இருந்திருந்தால் 2014-ன் போதே சிதம்பரம் மீது வழக்கு படதிவு செய்திருக்கலாமே. இவர்களின் நோக்கம் அது அல்ல. என்னுடைய மனுதாரரை அவமதிக்கவே இப்படியான முறைகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார் அவர்.
மேலும் படிக்க : இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சி.பி.ஐ வழக்கில் கைதுக்கான இடைக்காலத் தடை இன்று வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஊடகங்கள், ப.சிதம்பரம் குறித்து உண்மைக்குப் புறம்பான, போலியான, தவறான செய்திகளை பரப்பு வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த அரசின் முக்கிய நோக்கம் அவரை அவமானப்படுத்துவது மட்டுமே.
நாங்கள் மிகவும் மனமுடைந்துள்ளோம் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். 50 வருடத்திற்கும் மேலாக சிதம்பரம் பொதுவாழ்க்கையில் இருக்கிறார். தேவைக்கும் அதிகமான சொத்துக்கள் எங்களிடம் இருக்கின்றன. நாங்கள் ஒன்றும் பணத்தின் மீது பித்து கொண்டு அலையவில்லை என்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கும் தேவை எங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.