‘வீக் என்ட்’-ஐ கொண்டாடப் போறவங்க என்ஜாய்! பளபளக்கப் போகும் புதுச்சேரி ரயில் நிலையம்
Irctc Tamil News: பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால் புதுச்சேரி ஒரு பிரபலமான வார இறுதி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
Irctc Tamil News: பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால் புதுச்சேரி ஒரு பிரபலமான வார இறுதி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
irctc latest tamil news, irctc news i tamil, puducherry railway station world class, புதுச்சேரி ரயில் நிலையம், உலகத் தரம் பாண்டிச்சேரி ரயில் நிலையம்
Puducherry railway station: புதுச்சேரி ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறுகிறது. இந்திய ரயில்வே புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு புதிய மேம்பாட்டை கொடுக்கப் போகிறது. கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புக்காக Rail Land Development Authority (RLDA) ஆன்லைன் மூலமாக முன் ஏலம் (pre-bid) தொடர்பான கூட்டங்களை நடத்த உள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக இரண்டு முன் ஏலக் கூட்டங்களை 10 ஜூன் 2020 மற்றும் 17 ஜூன் 2020 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. புதுச்சேரி ரயில் நிலைய மறு சீரமைப்புக்கு ரூபாய் 44 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆகஸ்ட் 2020 இறுதியில் ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய மறு சீரமைப்புக்கான முன் ஏல கூட்டங்களில் ஆர்வமுள்ள ஏலதாரர்கள் பங்கேற்கலாம்.
RLDA ஒரு RFP (Request for Proposal) ஐ வெளியிட்ட பின்னர் புதுச்சேரி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்கான தகுதியான தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலம் முன் ஏலக் கூட்டங்களை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், புதுச்சேரி ரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகளான, மாற்றுத் திறனாளிகளுக்கான ஏற்பாடுகள், நிலையத்தின் இணக்கமான சகவாழ்வு மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் (harmonious co-existence of the station as well as real estate projects), DBFOT மாடலிலான பசுமை கட்டிடங்கள் மற்றும் பல வசதிகள் பொருத்தப்படும்.
Advertisment
Advertisements
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றியுள்ள ரயில்வே நிலத்தின் வணிக மேம்பாடு மற்றும் அதன் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவையும் இதில் அடங்கும். முன்மொழியப்பட்ட நிலம் 2 ஏக்கர் (நிலைய கூறு) மற்றும் 3.8 ஏக்கர் (வணிக கூறு) ஆக பரவிக்கிடக்கிறது. சலுகை ஒப்பந்தத்தின் (Concession Agreement) கீழ், திட்டத்தின் சலுகை காலம் 60 ஆண்டுகள் ஆகும், அதாவது ஏலம் எடுப்பவர் (concessionaire) நிலைய கட்டிடங்களையும் estate யும் 60 வருட காலத்திற்கு பராமரிக்க வேண்டும் மற்றும் இயக்க வேண்டும்.
பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால் புதுச்சேரி ஒரு பிரபலமான வார இறுதி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புதுச்சேரி ஒரு பெரிய அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகையை காண்கிறது, மேலும் 2022 ஆம் ஆண்டளவில் 25 லட்சமாக இது வளரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil