Advertisment

அன்சாரியின் மரணத்திற்கு காரணம் என்ன? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள்...

உடல் நிலை சரியில்லாத நிலையில் அப்படியே தரையில் படுத்துள்ளார் அன்சாரி. பிறகு அவருக்கு நினைவு தப்பியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand Mob Lynching Tabrez Ansari Post-Mortem, Jharkhand Mob Lynching, Jharkhand Man Tabrez Ansari Assault Case

Jharkhand Mob Lynching, Jharkhand Man Tabrez Ansari Assault Case

Abhishek Angad

Advertisment

Jharkhand Mob Lynching Tabrez Ansari Post-Mortem : ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சராய்கேலா - கர்ஸவன் மாவட்டத்தில் ஜூன் மாதம் 18ம் தேதி தன்னுடைய கூட்டாளிகளுடன் திருடச் சென்றுளார் தப்ரெஸ் அன்சாரி எனும் 22 வயது இளைஞன்.  கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அன்சாரியை ஊர் பொதுமக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்', ’ஜெய் அனுமன்’ என்று கூறச் சொல்லி வற்புறுத்தி, தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அன்சாரியை கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்தது. சனிக்கிழமை அவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலில் சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பிறகு அங்கிருந்து அவர் டாட்டா மெய்ன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்கின்ற வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக டாட்டா மருத்துவமனை அறிவித்துவிட்டது.

மேலும் படிக்க : ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…

Jharkhand Mob Lynching Tabrez Ansari Post-Mortem - மருத்துவர்களின் கருத்துகள் என்ன?

தாக்குதலுக்கு உள்ளான அன்று காலையில் (ஜூன் 18ம் தேதி காலை 7 மணி) சதார் மருத்துவமனையில் அன்சாரிக்கு முதல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டதை முறையாக கவனிக்க தவறியதே இந்த மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர் பரியல் மாரி அறிவித்துள்ளார்.  மாரி, அனிர்பன் மஹ்தோ, மற்றும் வி.டி.பி. சிங் ஆகிய மூன்று மருத்துவர்கள் தான் அன்சாரியின் பிரேத உடற்கூராய்வுகளை மேற்கொண்டனர்.

தலையில் அடிப்பட்டதாலோ, மூளையில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாலோ ஹேமராஜ் ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார் என்று கூறிய மாரி,  “அன்று காலை, வேலையில் இருந்து அன்சாரிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கேஸ்ரி இதனை கவனிக்க தவறியிருக்கலாம்” என்றும் கூறினார். மனிதர்களுக்கு ஷாக் அடிக்கும் போது உடலில் பல ரசயான மாற்றங்கள் உருவாகும். அது கூட ஒருவரின் இறப்பிற்கு காரணமாக அமையும். ஆனால் எதுவாக இருப்பினும் கெமிக்கல் ரியாக்சனிற்கான முடிவுகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளை பெற்றுக் கொண்ட பிறகே இறந்ததிற்கான காரணங்களை அறிவிக்க முடியும்.

மேலும் படிக்க : அன்சாரியை தாக்கியது தொடர்பாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடாதது ஏன் ? கேள்வி எழுப்பும் குடும்பத்தினர்

தலையில் மட்டுமல்லாமல் வலது தொடையிலும், முதுகுப்பகுதியிலும் பலத்த காயம் அடைந்திருந்தார் அன்சாரி. அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினருக்கு மருத்துவ குழு அனுமதி வழங்கியது.

ஜூன் 21ம் தேதி மாலை, அன்சாரிக்கு தலைச்சுற்றல், மயக்கம் ஆகிய பிரச்சனைகள் இருப்பதாக ஜெயிலர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சிறையில் இருக்க வேண்டிய மருத்துவர் விடுப்பில் சென்றுவிட்டதால், அன்சாரிக்கு முதன்முறையாக சிகிச்சை அளித்த மருத்துவர் அன்சாரிக்கு சிகிச்சைகள் அளித்து மருந்துகள் கொடுத்துள்ளார். ஆனால் மீண்டும் அடுத்த நாள் காலையில் அன்சாரி மீண்டும் மயக்கமுற்றதாக சதார் மருத்துவமனைக்கு செய்தி அறிவிக்கப்பட்டது.

உடல் நிலை சரியில்லாத நிலையில் அப்படியே தரையில் படுத்துள்ளார் அன்சாரி. பிறகு அவருக்கு நினைவு தப்பியது. பின்பு இரண்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் அன்சாரியை காப்பாற்ற இயலவில்லை.

Jharkhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment