கமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை... சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்... உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்?

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கிய கமல் நாத்தை காங்கிரஸ் ஏன் தேர்வு செய்தது என கேள்வி.

Kamal Nath Involvement in Sikh Riots : டிசம்பர் மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்ட 5 மாநிலத் தேர்தல்களில் மூன்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மூன்று மாநிலத்திலும் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற இழுபறி நிலவி வந்த நிலையில், அனுபவ சாலிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர் புதிய தலைமுறை அரசியல்வாதிகள். ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

மேலும் படிக்க : ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட் 

மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவினை பின்னுக்குத் தள்ளி முதல்வராக தேர்வானார் கமல் நாத். அவருக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் உள்ளிட்டோர் ஆதரவளித்தனர்.

அவர்களின் ஆதரவுடன் இன்று மதியம் பதவியேற்றார் கமல் நாத். அந்நிகழ்வில் புதிதாக முதல்வர் பதவியேற்றுக் கொண்ட ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திக்விஜய சிங், மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு, ஷரத் பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மரியாதை நிமித்தமாக, பாஜக உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் மூன்று முறை மத்திய பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்த சிவராஜ் சிங் சௌஹான் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

யார் இந்த கமல் நாத்?

மூன்று தலைமுறை காந்திகளை நேரில் கண்டவர். மூவர்களுக்கும் ஆக சிறந்த விசுவாசமான தொண்டனாக வாழ்ந்தவர் இந்த கமல் நாத். ஒரு காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரால் தன்னுடைய மூன்றாவது மகன் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.  அதற்கு காரணங்கள் உண்டு. மொராஜி தேசாய் ஆட்சியை கலைத்துவிட்டு 1980ம் ஆண்டு பிரதமராக இந்திரா காந்தி மீண்டும் பதவியேற்பதிற்கு பின்னிருந்து உதவிகள் மற்றும் வேலைகள் செய்ததில் கமல் நாத்தின் அரசியல் மற்றும் விசுவாசப் பங்கு மிகவும் அதிகமானது.

மேலும் படிக்க : இளம் அரசியல்வாதிகளை பின்னுக்குத் தள்ளி அனுபவசாலிகளை தேர்வு செய்த காங்கிரஸ்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பங்காற்றி வரும் அருண் யாதவ், இந்திரா காந்தி, ராஜீவ் மற்றும் சஞ்சய்க்கு அடுத்தபடியாக கமல் நாத் மீது மிகவும் நேசம் கொண்டிருந்தார். அவரை தன்னுடைய மூன்றாவது மகன் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.

1946ம் ஆண்டு, பிஸினஸ் குடும்பத்தில் பிறந்த அவர் டூன் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பினை முடித்தார். 1980ம் ஆண்டில் முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் ஏழாவது மக்களவையில் மிகவும் இளைய வயது எம்.பிக்கள் இருந்தனர். அதனால் அன்றைய எதிர்கட்சித் தலைவர்கள், சஞ்சய் காந்தியின் தோஸ்த்துகளுடன் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற கேலிகளுக்கு ஆளானது காங்கிரஸ்.

1977 முதல் 1980 வரை முரார்ஜி தேசாய்யின் ஆட்சி அமையப் பெற்றது. அந்த சமயத்தில் இந்திரா மற்றும் சஞ்சய் காந்தி என இருவருக்கும் நெருக்கமான காலக்கட்டம். அதனால் தான் என்னவோ இந்திரா காந்தி சிறைச்சாலை செல்லும் போதெல்லாம் கமல் நாத்தும் சிறைக்கு சென்றார். சஞ்சாய் காந்தி சிறைக்கு செல்லும் போதெல்லாம் கமல் நாத் சிறைக்கு சென்றார். இந்த கால கட்டம் தான் கமல் நாத் காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக உருமாறுவதற்கான காலகட்டமாக அமைந்தது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல் நாத் (Kamal Nath Involvement in Sikh Riots)

1984ம் ஆண்டு இந்திரா காந்தி, அவருடைய பாதுகாப்புக் காவலர்களால் கொல்லப்பட்ட பின்பு, சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. கமல் நாத்தும் தன்னுடைய பங்கிற்கு கலவரத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக சீக்கியர்கள் அவர் மீது இது நாள் வரையில் அதிருப்தியில் இருக்கின்றார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இவரை நியமித்த பின்பு, மக்கள் தொடர் எதிர்ப்புகளை வெளியிட்டனர். இதன் பின்னர் அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் இவரை மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக காங்கிரஸ் தேர்வு செய்திருப்பது வருத்தத்தை அளிப்பதாக சீக்கியர்கள் தங்களின் வாதத்தினை முன் வைக்கின்றார்கள்.

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் கமல் நாத் பங்கேற்றிருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் டெல்லி திலக் நகரில், வன்முறையால் பாதிக்கபட்ட சீக்கிய குடும்பத்தை சேர்ந்த தெஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவர் பாஜக கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் நாத் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதாரூர் “ஏன் காங்கிரஸ் இப்படியான ஒரு முடிவை எடுத்தது” என்று தன் தரப்பில் இருந்தும் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.

கமல் நாத் பதவியேற்கும் இதே நாளில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான சஜ்ஜன் குமார், சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.

அது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close