Advertisment

குருவாயூர், சபரி மலை கோவில்களில் வழிபாடு : விதிமுறைகளை வெளியிட்டது கேரளா

குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala government opens Guruvayoor, Sabarimala temples; check the guidelines here

Kerala government opens Guruvayoor, Sabarimala temples; check the guidelines here

Kerala government opens Guruvayoor, Sabarimala temples; check the guidelines here : குரு நான் வைரஸ் இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தது.  தற்போது ஒரு சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆங்காங்கே மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

எட்டாம் தேதியில் இருந்து கோவில்களை திறந்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்த பின்,  இந்தியாவில் பல்வேறு வழிபாட்டு தலங்கள் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளன.  இந்நிலையில் கேரளாவில் குருவாயூர் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குருவாயூர் கோவில்

www.guruvayurdevaswom.in என்ற இணையதளத்தின் மூலம் புக்கிங் செய்து மட்டுமே கோவிலுக்கு வருகை புரிய முடியும்.  9:30 மணியில் இருந்து பகல் 1:30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் வீதம் நாளொன்றுக்கு 600 பேர் மட்டுமே குருவாயூர் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  அதே போன்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கே திருமணம் நடைபெறும் என்றும் நாளொன்றுக்கு 60 திருமணங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திருப்பதி ஏழுமலையான் தரிசனம்… இப்ப புக் பண்ணா தான் டிக்கெட் கிடைக்கும்!

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காக 14ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  ஒரு மணி நேரத்திற்கு 200 பக்தர்கள் என நாளொன்றுக்கு 3200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

kerala high court son sabarimala, plastic to sabarimala, no plastic in sabarimala, சபரிமலை இருமுடியில் பிளாஸ்டிக்கிற்கு தடை, சபரிமலை, கேரள உயர் நிதிமன்றம் தேவஸ்வம் போர்டுகளுக்கு உத்தரவு, Kerala High Court order to Devaswom boards, plastic free sabarimala, Ensure no plastic in Sabarimala pilgrim offerings, kerala hc orders no plastic in sabarimala

காலை 4 மணி முதல் பகல் 1  மணி வரையும், பிறகு,  மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.  ஒரே சமயத்தில் 50 பேர்  சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  10 வயதிற்கு கீழ் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் படிக்க : சீனாவுடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா; எப்போது முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை?

வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை கோவிலுக்கு வருகை வருகை புரிய விரும்புபவர்கள் ”கோவிட் ஜாக்ரதா” என்ற போர்டல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  சபரிமலை செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஐ சி எம் ஆர் அங்கீகாரம் செய்யப்பட்ட ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகள் நெகட்டிவ் என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அந்த சான்றிதழை இணையதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.  குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment