New Update
Tamil News Updates : 22 தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் - புதிய எக்ஸிட் போல் முடிவு
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
Advertisment
Highlights
தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. 14 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். 3 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்கும். 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் ஆலோசனை .
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் மீண்டும் ஆலோசனை
இடைத்தேர்தல் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் முன்னறிவிப்பு இன்றி ஜெராக்ஸ் இயந்திரம் கொண்டுசெல்ல அதிகாரிகள் முயற்சி - திமுக வேட்பாளர் சரவணன் புகார்.
வாக்கு எண்ணும் மையத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும்- திமுக வேட்பாளர் சரவணன்
மக்களின் தீர்ப்பை மாற்றியமைக்க கூடாது என்பதே எங்களின் கோரிக்கை, இதனை முன்னாள் தேர்தல் ஆணையர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தகவல்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற 22 கட்சிகளின் கோரிக்கை இது என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்கும் 5 வாக்குச்சாவடிகள் எது என்பதை, வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னதாகவே அடையாளம் காண வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது முரண்பாடுகள் தென்பட்டால், அந்த தொகுதியில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும்
டில்லியில், தலைமை தேர்தல் ஆைணயர் சுனில் அரோராவை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காங். உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் புகார் மனுவை அளித்தனர்.
தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் "தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டம் மே 17 இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது. அவர் விதிமுறைகளை மீறி பேசியதாக கூறி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153(A), 505(2) ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிற்பகல் 3 மணி அளவில் தேர்தல் ஆணையரை சந்தித்து வாக்கெடுப்பு தொடர்பாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இது வகை பொதுநல மனுக்கள், பெரும் தொல்லை என்றும், மக்கள் அவர்களின் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை சுட்டுக் கொன்றது தமிழக காவல்த்துறை. இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விட 1.16% அதிகம் என்றும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்கு எண்ணும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நாளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்துகிறார். தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்தல் தொடர்பாக உங்களுக்கு எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இந்தியன் எக்ஸ்பிரஸின் புதிய முயற்சி.
உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இங்கே
23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் இருக்கும் முகவர்கள் கவனுத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரையில் மோசடிகள் நடைபெறாத வகையில் முகவர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ஒப்புகைச் சீட்டினை சரிபார்க்கும் போதும் முகவர்கள் உடனிருக்க அனுமதி வேண்டும் என்று திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தமிழக தேர்தல் தலைவர் சத்ய ப்ரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு அளித்து பேசி வருகிறார்.
23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய ப்ரதா சாஹூவிடம் திமுகவினர் மனு
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்திருக்கிறது உத்தர் தொகுதி. அதன் 200வது வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு வாக்குப் பதிவு நடைபெறும்.
குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், அதற்காக கர்நாடகாவில் இருந்து தண்ணீரைப் பெறு வேண்டும் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஜூன் 12ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைப் பெற்று மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறந்த தினம். தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்தவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெற்றாதாக ஆரம்பம் முதலே கூறி வந்தனர் எதிர்கட்சினர். தற்போது அந்த மோசடிகள் குறித்து புகார் அளிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உட்பட 21 கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தரவும் வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.