Madhya Pradesh Assembly election results 2018 : மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 230 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டுள்ளன.
116 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க இயலும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், சுயேட்சி கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
Madhya Pradesh Assembly election results live updates : முதல்வராவது யார் ?
10:00 : பெரும்பான்மை நிரூபிக்கத் தயார்
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் எங்களின் பெரும்பான்மையை நிச்சயமாக அவர் முன்பு நிரூபிப்போம் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
Kamal Nath, Congress in Bhopal: With utmost happiness, I wish to inform you that Congress has won clear majority. We have written a letter to the Governor to invite us so that we can prove our majority before him. #MadhyaPradeshElections2018 pic.twitter.com/sgccRiYUXi
— ANI (@ANI) 11 December 2018
09:45 : தேர்தல் ஆணையத்தின் முறையான அறிவிப்பு வெளிவர வேண்டும்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி எந்த கட்சி பெரும்பான்மை பெற்றதோ அதையே ஆட்சி அமைக்க அழைக்க இயலும் என்று கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
09:30 AM : பிரதமர் வாழ்த்து
வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் தெலுங்கானாவில் வெற்றி பெற்ற கே. சந்திரசேகர் ராவிற்கும், மிசோரம் மாநிலத்தில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
Congratulations to the Congress for their victories.
Congratulations to KCR Garu for the thumping win in Telangana and to the Mizo National Front (MNF) for their impressive victory in Mizoram.
— Narendra Modi (@narendramodi) 11 December 2018
09:15 AM : வெற்றியை உறுதி செய்த ராகுல் காந்தி
நேற்று மாலை தான் ராகுல் காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை உறுதி செய்தார். தற்போது மாநிலத்தின் முதல்வராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமல்நாத் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா இருவரில் யார் முதல்வராக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது.
09:10 AM : எந்த கட்சி வெற்றி பெற்றது ?
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓட்டு எண்ணும் பணி மிகவும் மந்தமான நிலையில் தான் இருந்தது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று அறிவித்து வெகு நேரம் ஆன பின்பும் கூட மத்தியப் பிரதேசத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்விக் குறியாக இருந்தது.
09:00 AM : ஆட்சி அமைக்க ஆளுநர் எந்த கட்சியை அழைப்பார் ?
சரிக்கு சரி என்ற கணக்கில் தான் பாஜகவும் காங்கிரஸும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்கக் கோருவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க : தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள
Madhya Pradesh Assembly election results 2018 - நேற்றைய நிலவரம்
5:15 PM: மாலை நிலவரப்படி காங்கிரஸ் 117 இடங்களையும், பாஜக 104 இடங்களையும் கைப்பற்றுகிற மாதிரி முன்னணி நிலவரம் சென்று கொண்டிருந்தது. தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த இழுபறியாக மத்தியபிரதேசம் தேர்தல் முடிவு அமைந்தது.
01:10 PM : பி.எஸ்.பி தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமையுமா ?
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து இழுபறிகள் நீடித்து வருகிறது. 108 - 107 என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இருப்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய இயலாத சூழலில் இருக்கிறது இரண்டு கட்சிகளும்.
230 தொகுதிகளிலும் போட்டியிட்ட மற்றொரு கட்சியான பி.எஸ்.பி (பகுஜன் சமாஜ் பார்ட்டி) தற்போது யாருடன் கூட்டணி வைக்குமோ அவர்கள் தான் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க இயலும்.
11:50 AM : காலையில் இருந்து காங்கிரஸ்ஸிற்கு சாதகமாக மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சி முன்னிலை வகித்தாலும் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகிக்கிறது. 116 இடங்களில் பாஜகவும், 107 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
11:00 AM : பெரும்பான்மை பெறுவோம் காங்கிரஸ் நம்பிக்கை
மத்தியப் பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல் நாத், இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
10:40 AM : புத்தினி தொகுதியில் முன்னிலை வகிக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்
10:30 AM நிலவரம்
காங்கிரஸ் மற்றும் பாஜக மத்தியில் இழுபறி நீண்டு கொண்டே செல்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலையில் இருந்தே பாஜகவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்ற வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
10:00 AM நிலவரம்
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வெறிச்சோடி இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக அலுவலகங்கள்
Madhya Pradesh Assembly election results 2018 கருத்துக் கணிப்பு முடிவுகள்
2013ம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலின் போது 165 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றது. பி.எஸ்.பி கட்சி நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றது.
முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் புத்தினி மற்றும் விதிஷா தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டார். 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்டது பி.எஸ்.பி கட்சி. நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
MP Seat Projection
Congress 125 ± 12 seats
BJP 103 ± 12 seats
Others 2 ± 5 seats
— Today's Chanakya (@TodaysChanakya) 7 December 2018
நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Election Results 2018 LIVE: Rajasthan | Madhya Pradesh | Chhattisgarh | Mizoram | Telangana Election Result 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.