மும்பையில் நேற்று பகல் 1.15 மணி அளவில், கட்கோபார் பகுதிக்கு உட்பட்ட சர்வோதயா நகர் ஜக்ருதி கட்டட வளாகம் பகுதியில் விமான விபத்து நிகழ்ந்தது. 20 வயதான பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானம் சோதனை ஓட்டத்திற்காக நேற்று ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டத்து.
மும்பையில் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் பி.எஸ்.ராஜ்புத், துணை விமானி கேப்டன் மரியா ஜூபேரி, பராமரிப்பு பொறியாளர் சுரபி, மற்றும் டெக்னீயன் மனீஷ் பாண்டே ஆகிய நால்வரும் விமான விபத்தில் உயிரிழந்தார்கள். மேலும் அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
எப்படி நடந்தது இந்த விபத்து என தெரிந்து கொள்ள
மும்பை விமான விபத்தில் பலியான கேப்டன் மரியா ஜூபேரியின் கணவர் பிராபத் கத்தரியா இதைப்பற்றி பேசும் போது, “மரியா எங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் முதல் பெண் விமானி. எங்கள் குடும்பத்தில் வேறு யாரும் விமானியாக இல்லை’’ என்று பெருமிதமாக கூறினார். 47 வயதான ஜூபேரி 17 வருடங்களாக விமான ஓட்டியாக இருந்து வந்தவர். அவர் விமானத்தில் 1000 மணிநேரங்களுக்கும் மேலாக பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mumbai Chartered Aircraft Crash - விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தின் புகைப்படம்... புகைப்படக் கலைஞர் - பிரசாந்த் நட்கர், இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேலும் நேற்று காலை, மும்பை மிரா சாலையில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் இருந்து கிளம்பும் போது “இன்று வானிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சோதனை ஓட்டம் நடைபெறாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறிவிட்டுச் சென்றார்”.
ஆனால் நேற்று மதியம் 1.15pm மணி அளவில் கத்தரியா ஜூபேரியிடம் பேச முற்பட்ட போது அவருடைய அலைபேசியில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் “வானிலை மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில் அவரை விமானம் ஓட்டச் சொல்லி அவருடைய நிர்வாகம் அவரை வற்புறுத்தியதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். இந்த விமான நிறுவனத்தின் நிறுவனர் இறந்தவர்களைப் பற்றி அறிந்து கொள்ள நேரிலோ அலைபேசியிலோ கூட தொடர்பு கொள்ளவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்து போன இரண்டு விமான ஓட்டிகளுக்கும் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். மேலும் ராஜ்புத் சோதனை ஓட்டத்திற்காக ஓட்டப்படும் விமானங்களினால் ஏற்படும் ஆபத்துகளை நன்கறிந்தவர். சோதனை ஓட்டம் என்பதால் அவர் அதிக கவனத்தில் இருப்பார். மேலும் வானிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது எதற்காக இந்த சோதனை முயற்சியை மேற்கொண்டார்கள் என்று இரு குடும்பத்தினரும் சந்தேகம் தெரிவித்தனர்.
விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் முழுத் தொகுப்பினையும் காண