சிபிஐ சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிபிஐயில் இருக்கும் உயர் பொறுப்பு வகிப்பவர் மீது முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரிப்பது இதுவே முதல் முறையாகும். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராகேஷ் அஸ்தானா குறித்து கருத்துகளை நேற்று பதிவு செய்திருந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அது தொடர்பான செய்தியைப் படிக்க
ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச வழக்கு
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய வேலையை செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் (central vigilance commission) புகார் அளித்தார்.
தற்சமயம் மொயின் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளருக்கு எதிரான வழக்குகளை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக ஹாதராபாத்தை சேர்ந்த சதீஷ் சனா பாபுவை இணைத்தனர். இந்த வழக்கில் இருந்து சனா பாபுவை விடுவிக்க சுமார் 3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
இதற்கு இடைத்தரராக மனோஜ் பிரசாத் என்பவர் வேலை செய்து வந்திருக்கிறார். இது குறித்த தகவல்களை சனா பாபு தெரிவிக்கவும் மனோஜ் பிரசாத்தினை கைது செய்திருக்கிறார்கள். அவர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்னிலையில் தன்னுடைய வாக்குமூலத்தினை தெரிவித்தார். இதனால் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவருக்கும் உத்தரவு
சனா பாபுவின் வாக்குமூலத்தில் திருத்தம் செய்த டிஎஸ்பி தேவேந்திர குமாரை நேற்று சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா அலோக் வர்மா மீதும் இணை இயக்குநர் அருண் குமார் சர்மா மீதும் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் அலோக் வர்மாவும், மொயின் குரேஷி வழக்கில் சனா பாபுவை விடுவிப்பதற்காக ரூ. 2 கோடி லஞ்சமாக பெற்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
இரண்டு முதன்மை சிபிஐ அதிகாரிகள் பரஸ்பரம் தங்களுக்குள் குற்றம்சாட்டிக் கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.