நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி – மார்ச்.20 காலை தண்டனை நிறைவேற்றம்

நிர்பயா வழக்கில் நாளை காலை திட்டமிட்டப்படி நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது

By: Updated: March 19, 2020, 08:44:43 PM

Nirbhaya Case: நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் நடந்தபோது நான் மைனராக இருந்தேன். ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார், அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு மூன்றாவது முறையாக டெத் வாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த 4 குற்றவாளிகளுக்கும் நாளை காலை 5.30 மணிக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

WHO பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் – ‘இந்தியா கொரோனா சோதனையை முடுக்கிவிட வேண்டும்’

இந்த 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திஹார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த சூழலில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்தபோது, நான் மைனராக இருந்தேன். ஆதலால், எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபன்னா ஆகிய 6 நீதிபதிகள் அமர்வு முன் இன்று காலை விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், “இனிமேல் எந்த வழக்கும் இதில் விசாரிக்கப்படாது. இந்த மனு வாய்மொழியாக விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. குற்றவாளியின் சீராய்வு மனு தொடர்பான அனைத்து மனுக்களையும் தீர ஆய்வு செய்துவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை வழக்கு முடிந்துவிட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதற்கிடையே குற்றவாளிகளில் மற்றொருவரான முகேஷ் சிங் சார்பில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் ரஞ்சன் கோகோய்

அதில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, தான் டெல்லியில் இல்லை என்று முகேஷ் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

தவிர அவர்கள் தங்கள் மனுவில், கொரோனா வைரஸ் பாதிப்பு டெல்லியில் நிலவுவதையும் குறிப்பிட்டு, வாழ்க்கை குறுகிய ஆயுளுக்கு செல்கிறது; பிறகு ஏன் மரண தண்டனை? என்கிற ரேஞ்சில் இறங்கி வந்து மனுவில் வேண்டுகோள் வைத்திருந்தனர். எனினும், இவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

இதனால், நாளை காலை திட்டமிட்டப்படி நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என்று மனு மேல் மனு தாக்கல் செய்தும், நீதிமன்றம் அனைத்தையும் நிரகாரித்துவிட்டதால், நிர்பயா வழக்கு நாளையோடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நிறைவேறும் பட்சத்தில், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த தண்டனை மரண கலக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nirbhaya case dec 16 delhi gang rape case supreme court curative petition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X