Odisha Priest sacrificed a man to save people from coronavirus : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, மனித உயிர்களை காக்க உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த பூசாரி ஒருவர் கொரோனாவை தடுக்க நரபலி கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கட்டாக்கில் அமைந்திருக்கும் கோவில் ஒன்றின் பூசாரியாக பணியாற்றி வருகிறார் 72 வயதான சன்சரி ஓஜா சாமி. கொரோனா ஒழிய வேண்டும் என்றால், கோவிலுக்கு வரும் பக்தர் ஒருவரை நரபலி தர வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
பக்தர் ஒருவர் அந்த நேரம் பார்த்து கோவிலுக்கு வருகை தர, அவரிடம் பூசாரி இதனை கூறியுள்ளார். பக்தர் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பூசாரி ஆத்திரத்துடன் அவரை தாக்கி, தலையை துண்டித்து கடவுளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையிடம் அவர் சரணடைந்துள்ளார். அவருக்கு மனநலம் பிடித்திருக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள். பூசாரி இந்த நரபலி தரும் போது மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.