Play Indian music in aircraft and airports : இந்திய விமான சேவை நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு கடிதம் எழுதிய இந்திய கலாச்சார ஆய்வுக் குழு விமானங்களில் இந்திய இசையை பயன்படுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் “இந்தியாவின் இசை இந்திய மக்களின் சமூக – மத வாழ்வின் ஒரு அங்கமாக செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் விமான சேவைகள், தத்தம் நாடுகளின் இசையையே தங்களின் விமானங்களில் இசைக்கின்றனர். அமெரிக்க விமானங்களில் ஜாஸூம், ஆஸ்திரிய விமானங்களில் மொசார்ட்டும், மத்திய கிழக்காசிய நாடுகளின் விமான சேவைகளில் அரபி இசையும் இசைக்கப்படுகிறது. ஆனால் இந்திய விமான சேவைகளில் எப்போதாவது மட்டுமே இந்திய இசை பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இசை உயர்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இதனை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்தின் கூடுதல் செயலாளர் உஷா பாதீ, விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் திருமண வயதை அரசு உயர்த்தக் காரணம் என்ன? விளக்கப் படங்கள்
சீனாவுடன் பிணக்கு; இந்தியாவுடன் இணைந்து எண்ணெய் கிணறு வயல்களை மேம்படுத்த இலங்கை முடிவு
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றி இந்திய இசையை இசைப்பது குறித்த இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவின் கோரிக்கையை இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பெற்றுள்ளது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் சுயதீன அமைப்பாக செயல்படும் இந்திய கலாச்சார ஆய்வுக் குழு இந்திய விமானங்கள் / விமானநிலையங்களில் இந்திய இசையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை டிசம்பர 23ம் தேதி அன்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் வைத்தது.
இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வினய் சஹாஸ்ரபுத்தே இந்த கடிதத்தை ஜோதிராதித்ய சிந்தியாவிடம் வழங்கினார். டிசம்பர் 23ம் தேதி ஐ.சி.சி.ஆர். குழுவின்தலைமையகத்திற்கு சிந்தியா சென்றிருந்தார், அங்கு விமானங்களில் இந்திய இசையை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டன.
விமான நிறுவனங்கள் பொதுவாக விமானத்தில் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் நிலையான Piped Music-ஐ இசைக்கின்றன. சில விமான நிறுவனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிராண்ட் டியூன்கள் மற்றும் பாடல்களை பயன்படுத்துகின்றன.
2021ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய 5 பேரிடர்கள்; யாஸ், டவ்-தே புயலால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?
தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் இந்திய விமானங்களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்தின் போது இந்திய இசையை பயன்படுத்தாது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று ஐ.சி.சி.ஆர். சிந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. நம்முடைய இசை செழுமையான பாரம்பரியத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது, ஒவ்வொரு இந்தியனும் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய பல விஷயங்களில் நம்முடைய இசையும் ஒன்று என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனு மாலிக், கௌஷல் S இனாம்தார், மாலினி அவஸ்தி, ஷவ்னக் அபிஷேகி, மஞ்சுஷா பாட்டீல், சஞ்சீவ் அப்யங்கர், ரீட்டா கங்குலி மற்றும் வஸிபுதீன் தாகர் உள்ளிட்ட இசைக்கலைஞர்களும் டிசம்பர் 23 அன்று நடந்த சந்திப்பின் போது கலந்து கொண்டு கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
தற்செயலாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விமான போக்குவரத்து அமைச்சகம், அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களை, தங்கள் விமானத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. 2019 ஆம் ஆண்டில், அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் போது காந்தியன் படத்தை தங்களின் விமானங்களில் வரைந்து மரியாதை செலுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil