Rahul Gandhi Prime Minister Candidate : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் திரு உருவ சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சிலையினை திறந்து வைக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தியினை நேரில் சென்று அழைத்தார் திமுக கட்சியின் தலைவர். அந்த அழைப்பினை ஏற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் இதர தேசத் தலைவர்கள் தமிழகம் வந்திருந்தனர்.
மேலும் படிக்க : பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்த மு.க.ஸ்டாலின்
Rahul Gandhi Prime Minister Candidate - மு.க. ஸ்டாலின் கருத்து
கடந்த 16ம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் சிலை திறப்பு விழா முடிந்த பின்பு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் பாஜகவினை வீழ்ச்சியடையச் செய்ய அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். பல்வேறு மாநிலக் கட்சியின் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் இருக்கின்ற அரங்கில், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியினை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். இதற்கு தமிழகத்தை சார்ந்த பல்வேறு கட்சிகளும் ஆதரவினை தெரிவித்து வருகின்றார்கள்.
Rahul Gandhi Prime Minister Candidate கூட்டணி கட்சியினரின் மாற்றுக் கருத்து
ஆனால் கூட்டணியில் இருப்பவர்கள் தங்களின் எதிர்ப்பினை உடனடியாக தெரிவித்துள்ளனர். பொதுவுடமைக்கட்சி, சமாஜ்வாடி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய் கட்சியின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜீ இது குறித்து பேசுகையில், “பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல. கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு என்னுடைய ஆதரவினை தருவேன்” என்று கூறியுள்ளார்.
இதர கட்சியினரின் முடிவு என்ன ?
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் “ மக்கள் பாஜக ஆட்சியின் மீது மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கின்றார்கள். தெலுங்கானா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜீ, மற்றும் ஷரத் பவார் ஆகியோர் இந்த கூட்டணியை ஒன்றிணைத்து வலுப்பெற செய்தவர்கள். ஒரு கூட்டணியில் அனைவரும் ஒரே கருத்தினை கொண்டிருக்க தேவையில்லை” என்று தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் யார் பிரதமர் என தேர்வு செய்ய இயலும் என இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் சுரவராம் சுதாகர் ரெட்டி கருத்து கூறியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ கட்சியினர் “பிரதமர் வேட்பாளரை தற்போதே அறிவித்தால், கூட்டணியில் பிளவு தான் உண்டாகும்” என தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூன்றாம் அணி உருவாக வாய்ப்பு உண்டா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.