Rajasthan Assembly Election Result 2018 : டிசம்பர் 7ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றது. மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்டுள்ள ராஜஸ்தானில் 2013ம் ஆண்டில் இருந்து பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாநிலத்தின் முதல்வராக வசுந்த்ரா ராஜே செயல்பட்டு வருகிறார்.
2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 163 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 21 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மீதம் இருக்கும் தொகுதிகளில் சிறிய மற்றும் சுயேட்சைக் கட்சிகள் வென்றன. சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஓட்டு சதவீதமானது சுமார் 20.29% ஆகும்.
இம்முறை 195 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், மீதம் இருக்கும் ஐந்து இடங்கள் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. அவை முறையே ஷரத் யாதவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சிக்கு இரண்டு இடங்களும், அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு இரண்டு இடங்களும் ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜக சார்பில் 200 இடங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்க இருக்கிறது.. அது குறித்த தொடர் அப்டேட்டினை தெரிந்து கொள்ள
Rajasthan Assembly Election Result 2018 : கருத்துக் கணிப்பு முடிவுகள்
11.34 AM : “எங்கள் வெற்றி ராகுல் காந்திக்கு நாங்கள் அளிக்கும் பரிசு. யாருக்கு எந்த பதவி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் முடிவு செய்வார்கள்” என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் இரண்டு முறை எம்.பி பதவி வகித்த சச்சின் பைலட் தெரிவித்திருக்கிறார்.
11.30 AM : காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் அசோக் கெலாத்திற்கு பதிலாக, இரண்டு முறை எம்.பி பதவி வகித்த சச்சின் பைலட் முதல்வர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
11.15 AM : ராஜஸ்தானில் காங்கிரஸ் தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும் : அசோக் கெலாட்
11.09 AM : ராஜஸ்தானில் 91 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக 71 இடங்களையும், சுயேட்சை கட்சிகள் 22 இடங்களையும் பிடித்துள்ளது
11.00 AM : ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் வாகனத்தை மலர்களால் அலங்கரித்துள்ளனர்.
10.45 AM : காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் முன்னாள் டிஜிபி ஹரிஷ் மீனா, டியோலி-உனியாரா தொகுதியில் 1,779 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கெலோத், சர்தார்பூரா தொகுதியில் 5,112 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
10.30 AM : எந்தெந்த தொகுதிகளில் பாஜக முன்னிலை:
- ஹனுமங்கர் தொகுதி - அமைச்சர் ராம்பிரதாப் - 658 வாக்குகள்
- நிமாஹெரா தொகுதி - அமைச்சர் ஸ்ரீசந்த் க்ரிப்லானி - 321 வாக்குகள்
- மால்வியா நகர் தொகுதி - அமைச்சர் காலிசரண் - 117 வாக்குகள்
- உதய்பூர் - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கட்டாரியா - 330 வாக்குகள்
- லோகாவத் தொகுதி - அமைச்சர் கஜேந்திர சிங் - 1,375 வாக்குகள்
- தெகானா தொகுதி - அமைச்சர் அஜய் சிங் - 1,311 வாக்குகள்
10.20 AM : ராஜஸ்தான் மாநிலத்தில் 72 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 54 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
10.00 AM : பாஜகவை சேர்ந்த தற்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே 4,055 வாக்குகள் பெற்று ஜல்ராபத்தான் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஷோக் கெலோத், சர்தர்புரா தொகுதியில் 5,112 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
கருத்துக் கணிப்பு தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற