Deeptiman Tiwary, Arun Janardhanan
Sri Lanka Bomb Blast Connects Kerala : ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையில், புனித ஞாயிறு அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் காத்தான்குடியில் இருந்த தேசிய தவ்ஹீத் ஜாமத் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிம். தன்னை மனித வெடிகுண்டாக மாற்றி வெடிக்கச் செய்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
அவர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டத்தில், ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மக்களை ஜஹ்ரான் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
காசர்கோடில் இருவர் வீட்டிலும், பாலக்காட்டில் ஒருவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்கள் 2016ம் ஆண்டு கேரளாவில் இருந்து ஈரானுக்கு 20 இளைஞர்களை அனுப்பியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த 20 இளைஞர்களில் சிலர் ஈரானுக்கு செல்லும் முன்பு இலங்கைக்கும், பின்னர் ஆஃப்கானிஸ்தானிற்கும் சென்று பின்னர் ஐ.எஸ்.-ல் இணைந்ததாக கூறப்பட்டுகிறது.
அந்த மூன்று நபர்களின் சமூக வலைதள நடவடிக்கைகளோ, இதர நடவடிக்கைகளோ அவர்கள் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக தோன்றவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருவர் மற்றும் கோழிக்கோட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைந்த அப்துல் ரஷீத் அப்துல்லா என்பவருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்ப்பட்டது.
மேலும் படிக்க : இலங்கையில் தொடரும் அதிரடி மாற்றங்கள்.. முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய இன்று முதல் தடை!
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
இந்த சோதனையின் போது சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள், சிம் கார்ட்கள், மெமரி கார்டுகள், பென் ட்ரைவ்கள், டைரிகள், டாக்டர் ஜாக்கிர் நாய்க் அவரின் வீடியோ அடங்கிய டிவிடிகள், மதத்தினை போதிக்கும் ஒலிக்கோர்வைகள் அடங்கிய சிடிகள், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏப்ரல் 4ம் தேதி தமிழக டிஜிபி அனைத்து காவல்த்துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இலங்கை – இந்திய உறவு மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையில் இருக்கும் இலங்கை ஹை கமிஷனுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
முன்பே எச்சரிக்கை விடுத்த இந்தியா… பாதுகாப்பை தளர்த்திய இலங்கை
எனக்கு அவர்கள் யாரையும் தெரியாது – கைது செய்யப்பட்ட ஆர். ஆஷிக்
ஜஹ்ரான் ஹாஷிம் பேசிய வீடியோ ஒன்றை, கோவையில் கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனில் இருந்து கைப்பற்றப்பட்டது. ஜஹ்ரான் தமிழகத்திற்கு வந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுகிறது.
ஆர். ஆஷிக், இஸ்மாயில், சலாவுதீன், ஜாஃபர் சாதிக் அலி, ஷாகுல் ஹமீத் மற்றும் ஷம்சுதீன் என்று இது வரை ஆறு நபர்களை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. கைது செய்யப்பட்ட ஆர். ஆஷிக் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், என்.ஐ.ஏ எவ்வித ஆதாரமும் இன்றி, இந்த வழக்கில் என்னை சிக்க வைக்கின்றது என்றும், தமிழகத்தில் இயங்கி வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பற்றி மட்டுமே எனக்கு தெரியும் என்றும் இது நாள் வரையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பற்றியோ, ஜஹ்ரான் ஹாஷிம் பற்றியோ எனக்கு எதுவும் தெரியது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் எனக்குத் தெரியாது. நான் யாருடனும் தொடர்பில் இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை அனைவரும் 2016ம் ஆண்டு சிறையில் இருந்தது தான். கேரளாவில் இருந்து 22 இளைஞர்கள் 2016ம் ஆண்டு மே முதல் ஜூலை வரையில் ஆஃப்கானிஸ்தானிற்கு சென்றது தொடர்பாக ”Unlawful Activities Prevention Act” எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் நாங்கள் அனைவரும் ஜெயிலில் இருந்தோம் என்றார்.
13 ஆண்கள், 6 பெண்கள், மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 22 நபர்கள் பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை விமான நிலையத்தில் இருந்து குவைத், துபாய், மஸ்கத், மற்றும் அபுதாபி சென்று அங்கிருந்து ஈரான் வழியாக ஆஃப்கானிஸ்தான் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.