Advertisment

இலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்!

கைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Bomb Blasts NIA investigation

Sri Lanka Bomb Blasts NIA investigation

Deeptiman Tiwary

Advertisment

Sri Lanka Bomb Blasts NIA investigation : இலங்கையில் நடந்த கொலைவெறி தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளி கடந்த ஆண்டு இறுதியில் சில மாதங்கள் இந்தியாவில் தங்கியது உறுதி செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் அவர் தங்கி இருந்ததாகவும், இங்கு இருக்கும் சில முக்கிய நபர்களிடம் அவர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka Bomb Blasts NIA investigation

ஜஹ்ரான் ஹாஷிம், இலங்கையில் ஈஸ்டர் அன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜஹ்ரான் ஹாஷிம் குறித்த விபரங்களை திரட்டி வருகிறது புலன் விசாரணை அமைப்பு. அவருடைய போனில் இருந்த தரவுகளின் படி, இந்தியாவில் கேரளா மற்றும் தமிழக பகுதியில் வசிக்கும் சிலருடன் அவர் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க : இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது

கேரளாவில் பல்வேறு முக்கிய இடங்களில் சோதனை நடத்திய பின்னர் ரியாஸ் என்பவரை கைது செய்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. 2016ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் அமைப்பிற்கு வேலை செய்வதற்காக செல்ல முயன்ற 22 நபர்களில் சிலருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார் இவர்.

பாலக்காட்டில் வசித்து வந்த ரியாஸ் அபுபக்கர் எனப்படும் அபுட் துஜனாவின் வீட்டில் ஜஹ்ரான் ஹாஷிமின் வீடியோக்கள் மற்றும் ஜாகிர் நாய்க்கின் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது, கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்.

மேலும் படிக்க : இந்தியாவில் ஐ.எஸ். அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் என்ன ?

இலங்கையில் இருக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து விலகிய ஹாஷிம் தன்னுடைய சொந்த குழு ஒன்றை துவங்கியுள்ளார். அதில் 32 இளைஞர்கள் இது வரை சேரந்ததாகவும், அவர்கள் மூலமாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட ரியாஸ் என்பவர், ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற ரஷீத் அப்துல்லாவிடம் இணைய தொடர்பில் இருந்துள்ளார் என்றும், அவருடைய ஆடியோ க்ளிப்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் ஆஃப்கானில் இருக்கிறார்.

மேலும் சிரியாவில் உள்ள அப்துல் கயூம் என்பவருடனும் தொடர்பில் இருக்கிறார் ரியாஸ். வல்லப்பட்டணத்தில் இருந்து ஆஃப்கான் சென்ற குழு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோவை கோட்டைமேட்டில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களிடமும் இதே போன்ற வீடியோக்களும், முக்கியத் தரவுகளும் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுக்கான தனி நாடு உருவாக்க இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஹாஷிம் அந்த வீடியோவில் பேசியிருந்தார். அந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு டிசம்பர் மாதம் மாற்றபட்டது.

அதன் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த வீடியோக்களை தான் ரா அமைப்பின் மூலமாக டிசம்பர் 4ம் தேதி எச்சரிக்கையாக இலங்கை புலன்விசாரணை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க : இந்திய எச்சரிக்கை செய்தும், இலங்கை பாதுகாப்புகளை தளர்த்தியது ஏன் ?

Tamil Nadu Kerala Srilanka Isis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment