அலோக் வர்மா விவகாரம் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் : சிபிஐ தலைமை இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஒருவர் மாற்றி ஒருவர் பரஸ்பரம் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க
தலைமை இயக்குநரின் பொறுப்புகளை நாகேஷ்வர ராவ் எடுத்துக் கொள்வார் என்று கூறியிருந்தது மத்திய அரசு. ஆனால் கட்டாய விடுப்பினை ஏற்றுக் கொள்ள இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அலோக் வர்மா.
அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவரின் வீட்டைச் சுற்றிலும் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இதனை கவனித்த அவரின் பாதுகாப்பு காவலர்கள் அந்த நான்கு நபர்களையும் பிடித்து டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
அலோக் வர்மா விவகாரம் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் :
அக்டோபர் 4ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிபிஐ அலுவலகம் சென்று ரபேல் பேர ஊழல் தொடர்பாக புகார் ஒன்றினை அளித்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குநர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவ்வழக்கினை கையில் எடுத்தால் மோடி நிலை மோசமாகிவிடும் என்றே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசினார்.
மேலும் படிக்க : அலோக் வர்மா பதவி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணை
இதனைத் தொடர்ந்து இன்று தேசிய அளவில் சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்தார். ரபேல் ஊழல் விசாரணையை தடுக்கும் வகையில் நடந்து கொண்ட மோடியின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாகவும், டெல்லியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு நடக்க இருக்கும் போராட்டத்தை நான் முன்னெடுக்கிறேன் என ட்வீட் செய்திருக்கிறார்.
Tomorrow, outside CBI offices nationwide, the Congress party will protest the PM’s disgraceful attempt to prevent an investigation into the Rafale scam, by removing the CBI Chief.
I will lead the protests outside CBI HQ in Delhi, at 11 AM. #CBIRafaleGate
— Rahul Gandhi (@RahulGandhi) 25 October 2018
03: 45 PM : லோதி காவல் நிலையத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் ராகுல் காந்தி
02 :30 PM : லோதி காவல் நிலையத்தில் இருக்கும் ராகுல் காந்தி
ராகுல் காந்தியை கைது செய்த காவல்துறையினர் ராகுலை லோதி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த கட்சித் தொண்டர்கள் காவல் நிலையத்தின் வெளியே அமர்ந்துள்ளனர்.
02:00 PM : கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் .
Congress President, Sh. Rahul Gandhi & other leaders arrested
— Randeep Singh Surjewala (@rssurjewala) 26 October 2018
01:45 PM : மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் : கூண்டுக்கிளிகளாய் சிபிஐ
காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினக் கூலிக்கு வேலைக்கு செல்லும் ஒரு உழைப்பாளி, கூண்டுக்கிளி போல் ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டு போராட்டத்தை நடத்தினார். அவரின் நிலை தான் சிபிஐ-யின் நிலை என காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
Hari Ram, a daily wage labourer hailing from Madhya Pradesh, caged and being presented to Rahul Gandhi at the Congress' protests outside CBI headquarters. It symbolises CBI, which is a "caged parrot", the party said. @IndianExpress pic.twitter.com/dxsXZLzxRI
— Sourav Roy Barman (@Sourav_RB) 26 October 2018
01:30 PM : தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போராட்டம்
Telangana: Congress workers stage protest near CBI Office in Hyderabad against the removal of CBI Chief Alok Verma. pic.twitter.com/ZQmkU0UodR
— ANI (@ANI) 26 October 2018
01:00 PM : சண்டிகரில் நடைபெற்ற போராட்டம் கலைப்பு
சண்டிகரில் மத்திய அரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை கலைக்க தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர் காவல்துறையினர்.
Chandigarh: Police use water cannon at Congress workers who are protesting against the removal of CBI Director Alok Verma pic.twitter.com/SXwR3AgGRq
— ANI (@ANI) 26 October 2018
12:00 PM : சண்டிகர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டம்
11: 00 AM : பாட்னாவில் தொடங்கியது போராட்டம்
Bihar: Congress workers hold a protest outside the CBI office in Patna against the removal of #CBIDirector Alok Verma. pic.twitter.com/30ggDtkxdI
— ANI (@ANI) 26 October 2018
10:00 AM : போராட்டத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ராகுல் காந்தி
இன்று காலை லோதி சாலையில் இருக்கும் தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் நீங்கள் பங்கேற்கலாம். இதே போன்ற போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது என்று தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.
Join us today at 11 AM as we march from Dayal Singh College on Lodhi Road to the CBI HQ, to protest the PM’s disgraceful & unconstitutional attempt to block an investigation into the Rafale scam by removing the CBI Chief. Similar protests are being held today, across India.
— Rahul Gandhi (@RahulGandhi) 26 October 2018
09:30 AM : லக்னோவில் பலத்த பாதுகாப்பு
Security forces deployed outside CBI office in Lucknow ahead of Congress protest against the removal of CBI Director Alok Verma. pic.twitter.com/HNDL3r1ewo
— ANI UP (@ANINewsUP) 26 October 2018
09:00 AM : திரிணாமுல் கட்சி ஆதரவு
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பினைத் தொடர்ந்து சிபிஐ அலுவலங்கள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
#Delhi Trinamool Congress to join the Congress party protest led by Rahul Gandhi at Central Bureau of Investigation headquarters against the removal of CBI Director Alok Verma; Visuals from outside CBI headquarters in Delhi pic.twitter.com/Q6qVFQTW6H
— ANI (@ANI) 26 October 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.