Trending viral video of Kerala Autorickshaw With Tap And Hand Wash Impresses netizens : கேரளா கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பினை பெற்றிருக்கிறது. கேரள அரசு மட்டுமின்றி, கேரள மக்களும் தங்களால் இயன்ற அளவு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பாக விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில், கேரளாவில் தான் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அப்போதே விழித்துக் கொண்ட கேரள மக்கள் சமூக பரவலாக கொரோனா மாறக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தினார்கள். ஆட்டோக்களில் ஏறுவதற்கு முன்பே கைகளை சுத்தமாக கழுவ ஆட்டோ ட்ரைவர் தண்ணீர் மற்றும் சோப்பினை தரும் வீடியோ பயங்கர வைரலாக பரவியது. அந்த வீடியோ தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க : கேரளாவில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம்!
அப்போது கைகளில் சோப், ஆட்டோவில் தண்ணீர் கேன். ஆனால் இன்று, ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட அனைத்தையும் வைத்து அசத்தி வருகிறார்கள் கேரள ஆட்டோக்காரர்கள். நம்ம ஊர்ல இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமான்னு நீங்க கேக்குறது எங்க காதுல விழுகாம ஒன்னும் இல்ல. ஆனா பாருங்க! அதுக்கும் சேத்து நெறைய காசு வாங்குவாங்க நம்ம ஆட்டோகார அண்ணாக்கள். கேரளாவில் நோய் தொற்று குறைய கேரள அரசு மட்டுமே காரணம் இல்லை. இவர்களும் தான். சில நாட்களுக்கு முன்பு டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தான் தற்போது இணையங்களில் வைரல் ஹிட்டான வீடியோ.
மேலும் படிக்க : கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil