மனோஜ் தத்ரேயி மோர்
யாரிந்த திருப்தி தேசாய் செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கேரளத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் மண்டல பூஜைக்காகவும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் சித்திர வேஷக்கட்டு நிகழ்விற்காகவும் சபரிமலை திறக்கப்பட்டது. ஆனால் அதில் பெண்கள் யாரும் ஐயப்பனை தரிசிக்க முடியாமல் போராட்டக்காரர்கள் பிரச்சனை செய்தனர்.
இந்நிலையில் ஐயப்பனிற்கு விரதம் மேற்கொண்டு மாலையிடும் சீசன் தொடங்கி இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கோவிலின் நடை திறந்திருக்கும். மகர விளக்கு பூஜைக்காக மகாராஷ்ட்ராவை சேர்ந்த திருப்தி தேசாய் புனேயில் இருந்து கொச்சி விரைந்தார். இம்முறை நிச்சயமாக ஐயப்பனை தரிசனம் செய்தே தீர்வேன் என்று வந்த அவர் ஒரு பெண்ணியவாதி மற்றும் சமூக ஆர்வலர். ஆனால் போராட்டக்காரர்களின் தீவிர போராட்டத்தினால் கொச்சியில் இருந்து மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் திருப்தி தேசாய். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
யாரிந்த திருப்தி தேசாய் ?
33 வயதான திருப்தி தேசாய் பூமாதா அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஷீரடி அருகில் இருக்கும் ஷனி சிக்னாப்பூர் என்ற பகுதியில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் 400 ஆண்டுகளாக பெண்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கோவிலாகும். அதில் பெண்கள் செல்ல வேண்டும் என்று கூறி அந்த கோவிலிற்கு சென்ற பெண்களில் இவரும் ஒருவர்.
அவரைப் பற்றி அவருடன் வேலைப்பார்த்த முன்னாள் ஊழியர் சொல்வது என்ன ?
சபரிமலை செல்வதற்காக கொச்சி சென்ற திருப்தி தேசாய் வெறும் கையுடன் வரவில்லை. அவருக்குத் தேவையான அனைத்துவிதமான அட்டென்சனும் அவருக்கு கிடைத்துவிட்டது. பூமாதா ரங்ககினி அமைப்பில் திருப்தி தேசாயுடன் பணியாற்றிய ப்ரியங்கா ஜக்தப் திருப்தி தேசாய் குறித்து பேசும் போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
பெண்களின் அனுமதி மறுக்கப்படும் கோவிலுக்குள் போராட்டம் நடத்தி உள்ளே செல்ல முயலும் திருப்தி தேசாய்க்கான நோக்கம் வெறும் புகழ்ச்சிக்கும் பேருக்கும் தான். ஆனால் இதை அறியாமல் பல அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மிகவும் தைரியசாலி என்று கூறி வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் நிப்பாணி என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த திருப்தி தேசாய் 20 வருடங்களுக்கு முன்பு புனேவிற்கு குடிபெயர்ந்தனர். தன்னுடைய குடும்பத்தின் வறுமை காரணமாக SNDT என்ற கல்லூரியில் இருந்து நின்றுவிட்டார். பின்னர் அவருடைய பி.ஏ பட்டப்படிப்பினை முடித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட ரெஹனா பாத்திமா யார் ?
பொது வாழ்க்கையில் திருப்தி தேசாய்
2008ம் ஆண்டு முதல் தான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் திருப்தி தேசாய். கோ-ஆப்ரேட்டிவ் வங்கி தொடர்பான பிரச்சனை ஒன்றிற்காக நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் தான் புனேவின் தலைப்புச் செய்தியாக மாறினார் திருப்தி தேசாய். அவருடைய தைரியத்தினை பார்த்து காங்கிரஸ் அவர் புனே முனிசிபல் கார்ப்ரேசன் தேர்தலில் போட்டியிட வைத்தது. ஆனால் அதில் டெபாசிட் இழந்தார் திருப்தி.
அரசியல் தனக்கு ஒத்துவராது என்று அறிந்த திருப்தி தேசாய் சமூக ஆர்வலராக உருவெடுத்தார். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் மிகவும் கணிசமான தொகையினை பெற்றுக் கொண்டு தான் உதவியே செய்வார் என்று கூறிகிறார் ப்ரியங்கா.
ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என மறுத்து கூறுகிறார் திருப்தி தேசாய். மக்கள் தங்களின் குறைகளோடு வரும் போது, அவர்களுக்கு எது நல்லதோ அதேயே நான் செய்கிறேன் என்று கூறுகிறார் திருப்தி.
கடவுள் வழிபாட்டில் பெண்களுக்கான உரிமை
ஒரு கடவுளை பெண் வழிபடுதல் என்பது அவருடைய உரிமை. அவரை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று எந்த கடவுளாவது கூறியிருக்கிறார்களா ? மாதவிலக்கிற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் ? என்று கேள்வி எழுப்புகிறார் திருப்தி தேசாய். இந்த ஏற்றத் தாழ்வுகளை களையவே நாங்கள் போராடி வருகிறோ என்று கூறியிருக்கிறார் தேசாய்.
2016ம் ஆண்டு சனி சிக்னாப்பூர் கோவிலின் கருவறைக்குள் சென்று பூஜை செய்தது தான் இவருடைய மிகப்பெரும் சாதனியாக பார்க்கப்படுகிறது. 400 வருடங்களாக அந்த கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை. இவரின் வருகைக்கு பின்பு கட்டுப்பாடுகளை தளர்த்தியது அந்த கோவில். இதில் அடைந்த வெற்றி தான், தொடர்ந்து இதே போன்ற பிரச்சனைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் .
ஆனால் அனைத்து வகையான புகழ்ச்சியும் தன்னை மட்டுமே சேர வேண்டும் என்பதில் மிக்க கவனமுடன் செயல்படுவார் என்று அவருடன் 2 வருடங்களாக வேலை செய்து வந்த துர்கார் ஷிர்கே கூறியிருக்கிறார்.
என்ன சொல்கிறது சிவசேனா ?
சிவசேனா அமைப்பின் உறுப்பினரான நீலம் கோர்ஹே “திருப்தி தேசாய் வளர்ந்து வரும் போராட்டக்காரர், கோவிலில் பெண்கள் அனுமதி பற்றி மற்றும் பேசாமல் இன்னும் பல பிரச்சனைகளை முன்னெடுத்து அதில் தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
நேசனல் காங்கிரஸ் பார்ட்டி தலைவர் வந்தனா சாவன் “பப்ளிக் ஸ்டேண்டிற்காக திருப்தி தேசாய் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்” என்ற குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.