’தென்னிந்திய டாக்டருக்கு அமெரிக்கர்கள் தனித்துவமான நன்றி’: வைரலாகும் வீடியோ

மைசூரிலுள்ள ஜே.எஸ்.எஸ் மருத்துவ கல்லூரியில் உமா படித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

By: Updated: April 23, 2020, 09:58:11 AM

Uma Madhusudan: கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகம் எதிர்த்துப் போராடுகையில், இந்த போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மக்கள் நன்றி கடன் பெற்றுள்ளனர். மார்ச் மாதத்தில், இந்தியர்கள் தங்கள் பால்கனிகளில் நின்று, இவர்களுக்காக நன்றி தெரிவித்தனர்.

விஜய்க்கு நன்றி கூறிய முதல்வர் ; மற்ற நடிகர்களும் உதவ முன் வர வேண்டும் என வேண்டுகோள்

இத்தாலி, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளிலும் மருத்துவ நிபுணர்களை உற்சாகப்படுத்த இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கு நன்றி தெரிவிக்க கார் பேரணியை நடத்தியதன் மூலம் அமெரிக்கர்கள்  தனித்து தெரிகிறார்கள்.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பகுதிகளில் ஒன்றான கனெக்டிகட்டில் உள்ள தெற்கு வின்ட்ஸர் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் உமா மதுசூதனன்.


இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர். இவர் தன் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கார்களில் ஊர்வலமாக வந்தபடி டாக்டர் உமாவின் தன்னலமற்ற பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

முதல்வர் பேச்சுவார்த்தை: சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மைசூரிலுள்ள ஜே.எஸ்.எஸ் மருத்துவ கல்லூரியில் உமா படித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவருக்கு அமெரிக்காவில் கிடைத்த இந்த பாராட்டு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Us peoples says thank you to southindian doctor uma madhusudan covid 19 video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X