கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கல்புர்கி மாவட்டத்தில் இதுவரை 943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமான முடிவுகள் கொரோனா பரவலை வேகப்படுத்தும் – அதிகாரிகள் அச்சம்
இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மருத்துவமனை கொரோனா வார்டில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும், நோயாளிகளின் குடும்பத்தினரும் இதனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
குல்பர்கா மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஜிம்ஸ்) பன்றிகள் உலவிய சம்பவம் மூன்று நாட்கள் பழமையானது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
Congratulations @BJP4Karnataka you have put Kalayana Karnataka on national TV. The 1st reported COVID death in the country was Kalaburagi. What are the lessons we have learnt? What did we teach others? What are the SOPs being followed? NOTHING!
BJP Govt is busy making profits! https://t.co/WcezceiNbo
— Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) July 19, 2020
"பன்றிகளின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு, மருத்துவமனையைச் சுற்றியுள்ள பன்றிகள் பிடித்துவேறு இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கல்புர்கி மாவட்ட ஆட்சியர் ஷரத் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில் பன்றிகளின் உரிமையாளர் மீது கல்புர்கி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.