Advertisment

2019 ரீவைண்ட் : உலக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

2019ம் ஆண்டில் உலக அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே  காணலாம். 

author-image
salan raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
2019 ரீவைண்ட் :  உலக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

what has happened in 2019 so far, new year , new year celebration,world politics in 2019

2019ம் ஆண்டில் உலக அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே  காணலாம்.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றி:   அமரிக்காவின் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனை குறிவைக்கும் நோக்கில் உக்ரைன் அதிபரிடம் டொனல்ட் ட்ரம்ப் பேசிய பேச்சு அமெரிக்கா அரசியலில் பெரும் தாக்கத்தை. அமெரிக்கா இறையாண்மையையும், அரசியலமைப்பையும் அதிபர் மீறிவிட்டதாக புகார்கள் முன்வைக்கப்பட்டன.

 

ட்ரம்ப்  பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தார் சபா நாயகர்  நான்சி பெலோசி. கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி அமெரிக்கா பாரளுமன்றத்தில் டொனல்ட் ட்ரம்ப்க்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இருந்தாலும், அமெரிக்கா செனட்டில், இதற்கான விசாரணை நடைபெறும். அங்கும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான்  டொனல்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்படுவார்.

முடிவுக்கு வரும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் : சிறுபான்மை அரசை நடத்தி வந்த  போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக ஆட்சியைக் கலைத்து  முன்கூட்டிய தேர்தலுக்கு  வழிவகுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கன்சர்வேட்டிங் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு - இந்த சிறப்புக் கட்டுரையை படிக்கவும்

அதிகம் கவலையாக்கிய இலங்கை ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பு:   ஈஸ்டர் தினத்தன்று  கொழும்பு கொச்சிக்கடை யில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் கத்துவப்பட்டியா செபஸ்டியர் தேவாலயத்திலும் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.  7 இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இலங்கையில் தொடரும் அதிரடி மாற்றங்கள்.. முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய இன்று முதல் தடை!

Sri Lanka Blast: சமூக செயற்பாட்டாளரை தீவிரவாத இயக்கத்தவர் என தவறாக அடையாளப் படுத்திய இலங்கை அரசு

publive-image

சம உரிமை - சுய மரியாதைக்கு பாதை அமைக்குமா இலங்கை அதிபர் தேர்தல்?

நவம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், 52 சதவீத வாக்குகள் பெற்று,புதிய அதிபராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே யார்? முழுப் பின்னணி

இலங்கையிடம் இந்தியாவின் ராஜதந்திரம் பலிக்குமா?

இலங்கை அதிபர் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினார். இதனை அடுத்து இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டார்.

ரோஹிங்கியா இனப்படுகொலை : ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றம் படி ஏறினார் ;  

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த டிசம்பர்  மாதம் நெதர்லாந்து நாட்டில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில்  ஆஜரானார். முஸ்லீம் ரோஹிங்கியா சிறுபான்மையினர்  மியான்மரில்  இனப்படுகொலை செய்ததாக காம்பிய அரசு சர்வேதச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது.

publive-image

Explained : ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றம் செல்ல காரணம் என்ன ?

இது தொடர்பான வழக்கு விசாரனையில், தனது நாட்டின் சார்பாக வாதாட ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றத்தின் படியை ஏறினார்.

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு:  நியூசிலாந்தின் நாட்டின் கிரைஸ்ட்சர்ச் என்ற கடலோர நகரத்தில் இருக்கும் இரண்டு  மசூதிகளில் நடந்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த நேரத்தில் அப்பகுதி அருகே இருந்த வங்க தேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் சேர்ந்த 28 வயதான ப்ரெண்டன் டாரன்ட், ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி என்று,  ஊடக அறிக்கைகளில் விவரிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட இவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன், நியூசிலாந்துக்கு இன்று ஒரு கருப்பு தினம் என்று தெரிவித்துள்ளார்.

நோட்ர-டாம் தேவாலய தீ விபத்து : பாரிஸின் தங்க மாளிகை என்று கருதப்படும் 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலய தீக்கு இறையானதுஇந்த சம்பவம் உலகளாவிய மக்களையும் துயரத்த்தில் ஆழ்த்தியது.

தீ விபத்தினால், இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன. நோட்ர-டாம் தேவாலயம் இருக்கும் அதே இடத்தில் முன்பைவிட அழகாக புதிதாக மறுநிர்மாணம் செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்:  

இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ். அமைப்பின் தலைவரான  அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கா, துருக்கி, குருது கூட்டுப்படையினறால் கொல்லப்பட்டார்.     

உலகில் மிகவும் தேடப்படும் நபராக கருதப்படும், இவரை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா பயங்கரவாதியாக அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.70 கோடிக்கு மேல்) பரிசுத்தொகை அறிவித்தது.

அமெரிக்கா அதிபர் தனது ட்விட்டரில், "அபுபக்கர் அல்-பாக்தாதி ஒரு கோழையாக, தன்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியதாகவும்"  குறிப்பிட்டிருந்தார்.

 

Srilanka America United Kingdom
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment