WFP Executive Director David Beasley : உலகின் பணக்கார நாடுகள், ஐ.நா. சார்பு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தினால் லட்ச கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா ஃபுட் ப்ரோகிராம் என்ற அமைப்பின் தலைவர் டேவிட் பெய்ஸ்லி, செய்தியாளரிடம் நேற்று பேசிய போது “உலகம் முழுவதும் சுமார் 82 கோடி மக்கள், தினமும் உணவு இன்றி, பட்டினி வயிற்றுடன் உறங்குகின்றார்கள். தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் 14 கோடி மக்கள், கூடுதலாக உணவின்றி அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகில், குறிப்பாக, போர் மற்றும் இதர அரசியல் சூழலால் சிக்குண்டு இருக்கும் மக்கள் 10 கோடி பேருக்கு ஐ.நா. உணவு திட்டத்தின் கீழ் உணாவு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 கோடி பேர் முழுக்க முழுக்க, இந்த உணவினை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனா, லாக்டவுன், உலக நாடுகள் நிதியை நிறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இம்மக்களுக்கு சாப்பாடு சென்று சேரவில்லை என்றால் மூன்று மாதங்களுக்குள் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஐ.நாவின் ஃபுட் ப்ரோகிராமிற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நிதியை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனாவால் பெரும் பொருளாதார சீரிழிவை சந்தித்து வரும் இந்நாடுகளால், ஐ.நாவிற்கு நிதியை நிறுத்தினால் நிச்சயமாக நிலைமை மோசமாகும் என்றும் து, ஐ.நா.,வின் உணவுத் திட்ட தலைவர் டேவிட் பெய்ஸ்லி அறிவித்துள்ளார்.