தலைமுடி வெட்ட 200 ரூபாயாம்: சென்னை 'லாக் டவுன்' பரிதாபம்

உள்ளே இருப்பவர் வெளியில் வரும் வரை, வாடிக்கையாளர்கள் சாலையில் விலகி நிற்கிறார்கள். ஆனால் கடையின் "ஷட்டர்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Haircut price increased in chennai, 200 rupees per head, corona lockdown

Haircut price increased in chennai, 200 rupees per head, corona lockdown

லாக் டவுனில் ரகசியமாக கடையை திறந்து வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த சலூன் கடைக்காரருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுபோன்ற பல கடைகள் திறந்த நிலையில் இருக்கின்றன. சில நேரங்களில் அரசாங்கத்தின் விதிகளை மீறி, மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் சில கடைகள் இயங்கி வருகின்றன.

Advertisment

பதுக்கும் அரசு பசியில் மக்கள் – ப.சிதம்பரம்

இதுபோன்ற பல கடைகள் திங்களன்று சீல் வைக்கப்பட்டு, வலுவான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், கடைகளின் எண்ணிக்கை மற்றும்  இருப்பிடங்கள் குறித்த விவரங்களை வழங்க அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையே சலூன்கள் திறக்கப்படுவதற்கு கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாக ஹேர்கட் செய்ய முடியாமல், மக்கள் அமைதியைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சிலர் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை கடை திறக்க காவல்துறையினரின் அனுமதி ‘கடிதத்துடன்’ தங்கள் தொழிலை நடத்தினர். இப்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல குடியிருப்பாளர்களுக்கு இதுபோன்ற பல கடைகள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது தெரியும். ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரான வி.கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று கடைகளை அறிந்திருப்பதாகக் கூறினார். கே.கே சாலையிலுள்ள கடையில், உள்ளே இருப்பவர் வெளியில் வரும் வரை, வாடிக்கையாளர்கள் சாலையில் விலகி நிற்கிறார்கள். ஆனால் கடையின் "ஷட்டர்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன" என்று கோபாலகிருஷ்ணன் கூறினார். இரண்டாவது அழகிரி வீதியிலும், மூன்றாவது தந்தை பெரியார் வீதியிலும் உள்ளது, என்றார்.

Advertisment
Advertisements

லாக் டவுன் அமலில் இருக்கும் போது, மூன்று வாரங்களுக்கு முன்பு தனது கட்டிடத்தில் இருந்த பாதுகாப்புக் காவலர் இப்பகுதியில் ஹேர்கட் செய்யச் சென்றதாக அண்ணா நகர் குடியிருப்பாளர் வி சந்தியா தெரிவித்தார். இதுபோன்ற சலூன்களுக்கு இரண்டு போட்டி சங்கங்கள் இருப்பதாக குரோம்பேட்டையைச் சேர்ந்த டேவிட் மனோகர் கூறினார். "ஒருவர் இணங்கினாலும், மற்றவரின் உறுப்பினர்கள் அதற்கு இணங்கவில்லை" என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் இடம் மாறுகிறது: இன்று முக்கிய முடிவு

மேடவக்கம் மெயின் ரோட்டிலுள்ள சலூனின் முடிதிருத்துனர், வீட்டிற்கு வந்து ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு முடி வெட்டிச் சென்றதாக நங்கநல்லூரைச் சேர்ந்த வி.ராமராவ் தெரிவித்தார். "அவர் தலா 200 ரூபாய் வசூலித்தார்" என்பதையும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: