கொரோனா போர் : மோடியின் தலைமை சிறப்பு – கடிதம் எழுதிய பில்கேட்ஸ்

இந்திய அரசு டிஜிட்டல் வசதிகளை சரியான முறையில் பயன்படுத்தி வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன் - பில்கேட்ஸ்

By: Updated: April 23, 2020, 10:06:58 AM

Bill Gates lauds modi’s leadership : கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா அசத்தி வருகிறது என்று மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மோடியின் தலைமையை பாராட்டியுள்ளார். கொரோனா வைரஸூக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகள் குறித்து பில்கேட்ஸ் மோடிக்கு புதன் கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பு மருந்து : இன்று மனிதர்களிடம் சோதனை நடத்துகிறது ஆக்ஸ்ஃபோர்ட்

அக்கடிதத்தில் “நாங்கள் உங்களின் தலைமை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாராட்ட விளைகின்றோம். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு, அதிகமாக பரவும் ஹாட்ஸ்பாட்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே செய்தல் போன்ற விவகாரங்களில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் படிக்க : நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ; மற்ற நடிகர்களும் உதவ முன் வர வேண்டும் என வேண்டுகோள்

இந்திய அரசு டிஜிட்டல் வசதிகளை சரியான முறையில் பயன்படுத்தி வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். ஆரோக்ய சேது ஆப் மூலம் கொரோனா வைரஸ் ட்ராக்கிங் மற்றும் காண்டாக்ட் ட்ரேசிங் ஆகியவற்றை கண்டறிதல் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவருக்குமான சமூக பாதுகாப்பு மற்றும் பொது சுகாதரத்திற்கு இடையே ஒரு சமநிலையை எட்டியிருப்பது நல்ல நிலை என்றும்” அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bill gates lauds modis leadership and proactive measures to contain covid19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X