Botswana reports mysterious deaths of hundreds of elephants in its okavango delta : போஸ்ட்வானா நாட்டில் அமைந்திருக்கும் ஒக்காவங்கோ டெல்டா பகுதிகளில் நூற்றுக் கணக்கான யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போஸ்ட்வானாவில் உலகிலேயே அதிக அளவில் யானைகள் உள்ளது. 1 லட்சத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளை கொண்டுள்ளது இந்த நாடு.
மேலும் படிக்க : இந்த தும்பிக்கைய வச்சுக்கிட்டு என்னதான் செய்றது? குட்டி யானையின் க்யூட் வீடியோ!
வன உயிர் மற்றும் தேசிய பூங்கா துறையின் தலைமை இயக்குநரான சிரில் தௌலோ கூறுகையில், ஒக்காவங்கோ டெல்டாவின் வடக்கு பகுதியில் 356 யானைகள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 275 யானைகளின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்த்ராக்ஸ் சோதனைகள் முடிவுற்ற பிறகே இந்த இழப்பிற்கு காரணம் என்ன என்று கண்டறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த யானைகள் அனைத்தும் தந்தங்களுடன் இருப்பதால் இது தந்த வேட்டைக்காக கொல்லப்பட்டது போன்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த யானைகளின் பரிசோதனை மாதிரிகள் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம் ஏற்கனவே அந்நாட்டின் வடமேற்கு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் 12 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இதற்கு முன்பு இப்படி ஏதும் நடைபெற்றதில்லை. ஆனால் நடந்து செல்லும் போது கீழே விழுந்து வலது மார்ப்புக்கூட்டில் பெரும் அடிபட்டே யானைகள் இறந்துள்ளன. ஆனால் இது தான் சரியான காரணம் என்று வரையறுக்க முடியாத நிலையில் தான் இந்த மரணங்கள் இருக்கிறது என்று அந்நாட்டின் வன உயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க : ”எவம்லே அது எங்க காட்டுக்குள்ள வர்றது?” பறவைகளை துரத்தும் குட்டி யானையின் க்யூட் வீடியோ!