”எவம்லே அது எங்க காட்டுக்குள்ள வர்றது?” பறவைகளை துரத்தும் குட்டி யானையின் க்யூட் வீடியோ!

நீங்கள் ஒரு வேளை இந்த வீடியோவை முன்பே பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வீடியோ உங்களுக்கு தான்.

By: Published: July 2, 2020, 12:36:18 PM

Trending viral video of baby elephant bravely shoos away birds in wobbly run :  யானைகளை பார்த்தால் யாருக்கு தான் உற்சாகம் ஒட்டிக் கொள்ளாது. யானைகள் என்றால் அனைவருக்கும் அத்தனை ஆனந்தம், துள்ளல், பரவசம் தான். வளர்ந்த யானைகள் ஒரு வகை என்றால் குட்டி யானைகள் எல்லாம் செம்ம சமத்து தான். அவைகள் விளையாடுகின்ற போதும், அதனை பார்க்கும் போதும் நமக்கு வருமே ஒருவித உற்சாகம்.

மேலும் படிக்க : இந்த தும்பிக்கைய வச்சுக்கிட்டு என்னதான் செய்றது? குட்டி யானையின் க்யூட் வீடியோ!

அதற்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ ஒன்றில் குட்டி யானை ஒன்று அருகில் இருக்கும் பறவைகளை துரத்திக் கொண்டு விளையாடும் காட்சி அத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறது.

இந்த வீடியோ ஏற்கனவே வெளிவந்து வைரலாகி இருந்தாலும் மீண்டும் இதனை ஷேர் செய்த போதும் நெட்டிசன்கள் தாறுமாறாக வரவேற்பினை அளித்துள்ளனர். யானை என்றால் அனைவருக்கும் அவ்வளவு துள்ளல் கொண்டாட்டம் தான். நீங்கள் ஒரு வேளை இந்த வீடியோவை முன்பே பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வீடியோ உங்களுக்கு தான்.

மேலும் படிக்க : 60 நொடிகளில் 196 கணக்குகளை ”சால்வ்” செய்த கில்லாடி சிறுவன்! கணித புலியின் வைரல் வீடியோ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trending viral video of baby elephant bravely shoos away birds in wobbly run

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X