“வீட்டில் இருந்து நாட்டை காக்கும் அனைவருக்கும் நன்றி” - பிரமீடு மூலம் செய்தி அனுப்பிய எகிப்து அரசு!
உலக நாடுகளை போன்று எகிப்து அரசாங்கமும், தங்களின் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
உலக நாடுகளை போன்று எகிப்து அரசாங்கமும், தங்களின் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
Corona outbreak Giza's Great Pyramid projected Thank you to those who keeping us safe
Corona outbreak Giza's Great Pyramid projected Thank you to those who keeping us safe : உலக நாடுகள் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும், நோய் பரவலை தடுக்க உதவ வேண்டும் என்று உலக நாடுகள் தங்களின் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மிகவும் பிரபலமாக இயங்கி வரும் சுற்றுலா தளங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. பார்வையாளர்கள் யாருமின்றி உலக அதிசயங்கள் தனித்து விடப்பட்டது போல் இருக்கிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு (01/04/2020) உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடு, "அனைவரும் வீட்டில் இருங்கள்”, “அனைவரும் ஒன்றாக தான் இருக்கின்றோம்” என்று ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழிகளில் ஒளி விளக்குகளை ஏற்றி தெரிவித்துள்ளது. மேலும் வீட்டிலிருந்து அனைவருக்கும் நன்றியும் செலுத்தியுள்ளது எகிப்து அரசாங்கம்.
உலக நாடுகளை போன்று எகிப்து அரசாங்கமும், தங்களின் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. உலக அளவில், இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டிருக்கிறது அமெரிக்கா. அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக மாறியுள்ளது இத்தாலி. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil