20 நொடிகள் கைகளை சோப்பு போட்டு கழுவினால் மட்டுமே கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்று உலகின் மூலை முடுக்கெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சோப்பு போட்டு கைகளை கழுவ உங்களுக்கு தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கும் காலத்தில் மட்டுமே நீங்கள் சேனிடைஸைரை பயன்படுத்த வேண்டும். மனிதர்களுக்கு சொல்லி சொல்லி சலித்து போய்விட்டது.
ஆனால் இங்கே ஒரு ஒராங்குட்டான் குரங்கு தன்னுடைய கைகளை சோப்பு போட்டு நன்றாக, சுத்தமாக தேய்த்து கழுவிக் கொண்டிருக்கிறது. சாண்ட்ரா என பெயரிடப்பட்ட அந்த ஒரங்கோட்டானுக்கு வயது 34.
ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த சாண்ட்ரா தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ஜெண்டினா நாட்டில் தனியாக கழித்தது. தன்னுடன் துணைக்கு யாரும் இல்லாத நிலையில் வாழ்ந்த சாண்ட்ரா கடைசியாக செண்டர் ஃபார் கிரேட் ஆப்ஸ் (Center for great apes) என்ற, ஒரங்கோட்டானுகளுக்கான சரணாலயத்தில் வாழ அனுமதி வழங்கப்பட்டது.
விளையாட்டுப் பொருட்களை சுத்தம் செய்யும் ஊப்ஸி குரங்கு
இந்த தனியார் சரணாலயம் தென்மத்திய ஃப்ளோரிடாவில் அமைந்திருக்கும் வவுச்சுலாவில் அமைந்துள்ளது. 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சரணாலயத்தில் தற்போது மொத்தம் 23 ஒராங்குட்டான்கள் வசித்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news