Coronavirus 90 years old Belgium woman died : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்நோய்க்கு எதிராக மாபெரும் யுத்தத்தையே நடத்தி வருகின்றனர். செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர்கள் இல்லாமல் நிறைய நாடுகள் திண்டாடி வருகிறது.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
இந்நிலையில் பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி சூசன் ஹொய்லாயெர்ட்ஸ் (Suzanne Hoylaerts ) என்பவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. வெண்டிலேட்டர்களை இளைய மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ஏற்கனவே நன்றாக வாழ்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் இல்லாமல் சமாளித்த அந்த மூதாட்டி 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இந்த தியாக உள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் பலரையும் கவலை அடைய வைத்துள்ளது இந்த சூழல். உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பலரும் அவரின் ஆத்மாவிற்காக வேண்டிக் கொள்கின்றனர்.