லாக்டவுன் எல்லாம் ஒரு தடையா? இரு நாட்டு எல்லைகளில் தினமும் சந்திக்கும் ”இளம்” காதலர்கள்!

பாட்டி காஃபியும் டேபிளும் தன்னுடைய காரில் கொண்டு வந்து தர, தாத்தா அவர்கள் இருவருக்கும் காஃபி கலந்து வைப்பார்.

By: Updated: April 23, 2020, 04:19:46 PM

Coronavirus Lockdown Denmark Germany Border can’t Stop This Elderly Couple : கொரோனா வைரஸ் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறது. பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அதே போன்று தான் ஜெர்மனியையும் டென்மார்க்கையும் இணைக்கும் முல்லேஹூஸ்வெஜ் (Mollehusvej Border) எல்லையும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த இளம் ஜோடிகள், நம்பினால் நம்புங்கள்.

மேலும் படிக்க :கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்படுவதன் பின்னணி – வலுவான சுகாதார அமைப்பு

85 வயதான விவசாய பாட்டி இங்கா ராஸ்முஸ்ஸென் தினமும் டென்மார்க் எல்லையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து தன்னுடைய ஆண் நண்பரை பார்க்க டொயோட்டா யாரிஸில் வருகிறார்.  கர்ஸ்தென் துச்ஸென் ஹன்சென் (Karsten Tüchsen Hansen) 89 வயது தாத்தா ஜெர்மனி எல்லையில் இருந்து தினமும் தன்னுடைய சைக்கிளில் பயணித்து வந்து தன்னுடைய தோழியை பார்த்து செல்கிறார். இவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பு மருந்து: எம்.ஜி.ஆர் பல்கலை.யின் 70% முயற்சி வெற்றி

பாட்டி காஃபியும் டேபிளும் தன்னுடைய காரில் கொண்டு வந்து தர, தாத்தா அவர்கள் இருவருக்கும் காஃபி கலந்து வைப்பார். முல்லேஹூஸ்வெஜ் எல்லையில் பாட்டி டென்மார்க் எல்லையிலும் தாத்தா ஜெர்மன் எல்லையிலும், அமர அவர்களுக்கு இடையேயான இரு நாட்டு எல்லை 2 அடி பிரித்து வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus lockdown denmark germany border cant stop this elderly couple to meet everyday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X