265 மில்லியன் மக்கள் உணவுக்கு வழியின்றி வாடும் நிலை உருவாகலாம் - ஐ.நா எச்சரிக்கை
ஏற்கனவே கொரோனா வைரஸால் உலகம் முடங்கியுள்ள நிலையில், வேலைக்கு சென்றால் தான் அன்று உணவு என்று இருக்கும் கோடிக் கணக்கான மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்
ஏற்கனவே கொரோனா வைரஸால் உலகம் முடங்கியுள்ள நிலையில், வேலைக்கு சென்றால் தான் அன்று உணவு என்று இருக்கும் கோடிக் கணக்கான மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்
3 lakhs people will die everyday due to hunger : WFP Executive Director David Beasley
Number of hunger would double this year says World Food Program : கொரொனா வைரசினால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இந்த பேரிழப்பில் இருந்து மீண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.சமீபத்தில் உலக உணவு திட்டம் அமைப்பான world food program உலக அளவில் பசியால் வாட இருக்கும் மக்கள் தொகை குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த உலக உணவு திட்டமானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக திகழ்கிறது.
மத்திய மற்றும் குறைவான அளவில் வருவாய் ஈட்டும் நாடுகளை சேர்ந்த சுமார் 265 மில்லியன் மக்கள் இந்த ஆண்டு இறுதியில் பசியால் வாடும் அவல நிலையை எட்டுவார்கள் என எச்சரிக்கை செய்துள்ளது ஃபுட் ப்ரோகிராம்.கடந்த ஆண்டு பசியால் வாடிய மக்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டின் போது உணவு பற்றாக்குறையால் 135 மில்லியன் மக்கள் வறுமையில் வாடினார்கள்.
உணவு பற்றாக்குறையால் வாடும் அதிக நாடுகளை ஆப்ரிக்கா கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக அளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களை தாக்கியுள்ளது. 1 லட்சத்தி 64 ஆயிரம் பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸால் உலகம் முடங்கியுள்ள நிலையில், வேலைக்கு சென்றால் தான் அன்று உணவு என்று இருக்கும் கோடிக் கணக்கான மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது ஃபுட் ப்ரோகிராம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“