Advertisment

வெள்ளை நிறத்தில் மான்கள் பார்த்ததுண்டா? அதுவும் இத்தனை அழகாக?

இந்த நிறம் நிறக் குறைபாட்டால் உருவாவதில்லை. குதிரைகள் போன்று இரண்டு நிறங்களிலும் இருக்குமாம் இந்த வெள்ளை மூஸ் மான்.

author-image
WebDesk
May 21, 2020 17:41 IST
White Moose rate appearance in Sweden viral video of white moose

White Moose rate appearance in Sweden viral video of white moose

White Moose rate appearance in Sweden viral video of white moose : மிகப்பெரிய மான் இனங்களில் ஒன்று தான் மூஸ். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் வாழக்கூடிய இந்த வகை மான்கள் அதன் கொம்புகளுக்காக பெயர் பெற்றவை. இதில் வெள்ளை நிற மான்களும் இருக்கிறது. ஸ்வீடன் நாட்டில் மட்டுமே இந்த வெள்ளை நிற மான்கள் அதிகம் காணப்படுகிறது. ஆனால் நிலைமை என்னவென்றால் அவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. 75 முதல் 100 வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க : வாத்து குடும்பம் சாலையை கடக்க போக்குவரத்தை நிறுத்திய ரஷ்ய காவல்துறை – வைரல் வீடியோ

மிக சமீபத்தில் காட்டில் இருந்து வெளியே வந்த வெள்ளை நிற மூஸ் அனைவரையும் ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சாலையை கடந்து புதர்கள் மண்டியிருக்கும் பகுதியை அடைந்த அந்த மான், அங்கிருக்கும் செடி கொடிகளை உண்டு கொண்டிருக்கிறது. அந்த வைரல் வீடியோ தற்போது உங்களுக்காக.

இவை முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், நிறக் குறைப்பாட்டால் பிறக்கும் அல்பினோ வகை விலங்குகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. குதிரைகள் மற்றும் பறவை இனங்களில் ஒரே இனம் ஆனால் பல்வேறு நிறங்களில் இருப்பது போல் இந்த மூஸ் வகை மான்களும் பைபல்டாக இருக்கிறது.

மேலும் படிக்க : ”என் மனைவி கூகுள் மேப்பை பாத்து சந்தேகப்படுறாங்க சார்”… கூகுள் மீது கணவர் புகார்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

#Sweden #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment