வேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா... இந்த மூலிகை டீ குடிங்க

5 Herbal Tea Recipes To Boost Your Immunity : தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும், கிரீம், லோஷன்...

5 Herbal Tea Recipes : கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால்தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பதுதான் நம் பண்பாடு.

5 Herbal Tea Recipes

அன்றாடம் உண்ணும் உணவிலுமே மூலிகைகளை சேர்க்கும் வழக்கமும் இந்தியாவில் தான் உள்ளது. வெளிநாட்டினர் பலரும் உடல் எடையை குறைக்க பணத்தை செலவழிக்கும்போது நாம் அன்றாடம் சாப்பிடும் மூலிகைகள் கொண்டு ஒரு டீ குடித்தால் போதும், உடல் எடை சரசரவென குறையும். உடல் எடை குறைவதை விட முக்கிய பலன் ஒன்று உள்ளது, அது தான் உடலின் ஆரோக்கியம்.

5 Herbal Tea Recipes : மூலிகை டீ செய்முறை

பல கிரீம்களையும், லோஷன்களையும் வாங்கி வெளியே இருக்கும் சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி எடுக்கிறோம், ஆனால் உடலுக்கு உள்ளே உறுப்புகள், இரத்தம் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நாம் முயற்சி எடுப்பதே இல்லை. நேரமில்லை என்று போகிரப் போக்கில் சொல்லிவிட்டு செல்லாதீர்கள்.

தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும், கிரீம், லோஷன் இல்லாமலே சருமம் ஜொலிக்கும்.

1. துளசி டீ

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
பால் – தேவையான அளவு

செய்முறை:

துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும். பின் டீத்தூள், சர்க்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.

2. புதினா டீ

தேவையான பொருட்கள் :

புதினா இலை – 5
தேயிலை – ஒரு டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்
பால் – கால் டம்ளர்

செய்முறை:

ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

3. இஞ்சி டீ

தேவையான பொருட்கள் :

இஞ்சி – 2 அங்குலத் துண்டு,
ஏலக்காய் – 2,
பால் – கால் கப்,
பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவிச் சுத்தம்செய்யவும். ஏலக்காயைத் தட்டி இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் கலந்து அருந்தலாம். தினசரி காலையில் பருக ஏற்றது.

4. புதினா டீ

தேவையான பொருட்கள் :

புதினா இலை – 5,
தேயிலை – ஒரு டீஸ்பூன்,
தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்,
பால் – கால் டம்ளர் (விருப்பப்பட்டால்).

செய்முறை:

ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

5. பட்டை டீ

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ – 2 டீஸ்பூன்,
பட்டைப்பொடி – கால் டீஸ்பூன்,
தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கொதிக்கும் நீரில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின், வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். விருப்பப்பட்டால், பால் சேர்க்கலாம்.

சுவைக்கு மட்டுமல்ல தொப்பையை வேகமாக குறைக்கவும் உதவும் பீனட் பட்டர்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close