இதய பராமரிப்பு முதல் எடை குறைப்பு வரை 7 நன்மை: சுரைக்காயை இப்படி பயன்படுத்துங்க!

suraikai Health tips : அதிக எடை, உடல் பருமனைக் கொண்டோர், சுரைக்காய் ஜூஸ் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்

மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய்.  இந்தியா, அமெரிக்கா, கனடா,ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும், இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா என்று நம்பப்படுகிறது

சுரைக்காயின் ஏழு முக்கிய நன்மைகளை இங்கே காணலாம்.

மன அழுத்தம் :  சுரைக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைகிறது. நீர்சத்து மிகுந்த காய்கறி என்பதால் உடல் வெப்பநிலை கணிசமாக குறைகிறது. இது மயக்க மருந்து குணங்களையும் கொண்டுள்ளது.

இதயத்திற்கு நன்மை பயக்கும் : சுரைக்காய்  இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வாரம் மூன்று தினங்களுக்கு சுரைக்காய் சாரை குடிப்பது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும். இரத்த அழுத்தமும் சீராகும்.

உடல் எடை குறைப்பு : அதிக எடை, உடல் பருமனைக் கொண்டோர், சுரைக்காய் ஜூஸ் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளன.

தூக்கமின்மை : போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது. சுரைக்காய் ஜூஸுடன் சிறிதளவு எள் எண்ணெய் கலந்து குடித்தால்    வெறுமனே கலக்கவும், நீங்கள் நன்றாக தூங்குவீர்கள்.

7 health benefits of the humble bottle gourd or ‘lauki’

தலைமுடி நரைப்பதை தடுக்கிறது : உலகம் முழுவதும் ஏற்பட்ட வாழ்வில் மாற்றங்களாலும், காற்று மாசுபாடு காரணமாகவும் இளம் வயதிலேயே முடி நரைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் முடியின் நிறத்தையும், அமைப்பையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

எடை குறைப்பு முதல் ஞாபகசக்தி வரை… அவசியமான புதினா; பயன்படுத்துவது எப்படி?

 

செரிமானத்திற்கு உதவுகிறது : இதில் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே

குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சுரைக்காய் கூட்டு கொடுப்பதுண்டு. மேலும், சருமங்களை பராமரிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 7 health benefits of suraikai juice suraikai reduces stress and benefits the heart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com