சொன்ன மாதிரியே காதலை சக்சஸ் செய்த நடிகை மிருதுளா - காதலனுடன் நிச்சயதார்த்தம்

திருமணம் எப்போது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மிருதுளா. இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன

மலையாளத்தில் ‘ரெட் சில்லீஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகை மிருதுளா முரளி. பின்னர் தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த மிருதுளா, ஃபகத் பாசிலுடம் அயாள் நிஜனல்ல என்ற படத்திலும் இந்தியில் ரத்தேஷ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இவரும் இயக்குநர் நிதின் மாலினி விஜய் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இருவீட்டாரின் குடும்பத்தினரும், நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் எப்போது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மிருதுளா. இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

சிறுவயதில், ஜீவன் டிவி எனும் சேனலில் Dial & See எனும் நிகழ்ச்சியை தனது சகோதரர் மிதுன் முரளியுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். தவிர, ஏகப்பட்ட விளம்பரத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, Kappa Tvயில் அசோசியேட் தயாரிப்பாளராகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

இதற்கு பிறகு தான் அவர் சினிமா உலகிற்கு நுழைந்தார்.

ஷாருக்கான் தொடங்கி, அஜித், சிவகார்த்திகேயன் வரை டிவி சேனலில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி இன்று உச்சம் அடைந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க – ’சின்னத் தம்பி’ மலருக்கு இத்தனை வயசு தானா?

அது போல் டிவியில் பணியைத் தொடங்கி இன்று நாயகியாக வளர்ந்து, இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் மிருதுளாவுக்கு நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

தேவதர்ஷினியின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் ஒரே நபர் – ஒவ்வொரு மனைவிக்கும் இப்படியொரு கணவர் அமைந்தால்….

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close