அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நடிகை ஷர்மிளா – பணமில்லை என வேதனை

சினிமாவில் பல படங்களில் நடித்து, தொலைக்காட்சியிலும் பிரபலமாகி, நல்ல டான்சராக இருந்த ஒரு நடிகை சிகிச்சைக்கு பணமின்றி அரசு மருத்துவமனை செல்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது உண்மை தான். இவரை பார்த்தால், ‘அட இவரா?’ என்று கேட்பீர்கள். ஆனால், பெயர் சட்டென்று உங்களுக்கு நினைவுக்கு வராது. நடிகை ஷர்மிளா… மலையாளத்தில் இவரை அனைவருக்கும் தெரியும். கேரளாவில் தான் பிறந்தார். ஆனால், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஷர்மிளாவுக்கு வெற்றிகளை […]

actress sharmila took treatment in chennai government hospital - அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நடிகை ஷர்மிளா - பணமில்லை என வேதனை
actress sharmila took treatment in chennai government hospital – அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நடிகை ஷர்மிளா – பணமில்லை என வேதனை

சினிமாவில் பல படங்களில் நடித்து, தொலைக்காட்சியிலும் பிரபலமாகி, நல்ல டான்சராக இருந்த ஒரு நடிகை சிகிச்சைக்கு பணமின்றி அரசு மருத்துவமனை செல்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது உண்மை தான்.

இவரை பார்த்தால், ‘அட இவரா?’ என்று கேட்பீர்கள். ஆனால், பெயர் சட்டென்று உங்களுக்கு நினைவுக்கு வராது.

நடிகை ஷர்மிளா…

மலையாளத்தில் இவரை அனைவருக்கும் தெரியும். கேரளாவில் தான் பிறந்தார். ஆனால், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஷர்மிளாவுக்கு வெற்றிகளை விட சர்ச்சைகளே அதிகம் சுற்றி சுற்றி வந்தன.

சூர்யாவின் சூரரைப் போற்று; மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமாவின் உயரமான வில்லன் பாபு ஆண்டனி நினைவிருக்கிறதா?….

அவருடன் சில காலம் ஷர்மிளா லிவ் இன் ரிலேஷன்ஷிப்-ல இருந்தார் என்று அக்கட தேசத்தில் கூறப்படுவதுண்டு. அடுத்ததாக டிவி நடிகர் கிஷோரை திருமணம் செய்தார். ஆனால், அது விவாகரத்தில் முடிய, பிறகு ராஜேஷ் என்ற இன்ஜினியரை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறக்க, மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்.

இருப்பினும், சினிமா வாய்ப்பும் அவருக்கு அவ்வப்போது வந்து கொண்டே தான் இருந்திருகிறது. சில படங்கள் ரிலீசாகாமல் உள்ளன. விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தின் ஹீரோயினுடைய அம்மாவாக நடித்து தமிழில் நல்ல கம்பேக் கொடுத்தார்.

முன்னதாக, விஜய் டிவியில் ஷோ ஒன்றை நடத்தியவர், ஜோடி நம்பர் ஒன் சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிகில், விஸ்வாசம், பேட்ட… 5 நாள் அதகளப்படுத்தும் சன் டிவி

வீட்டில் வழுக்கி விழுந்த காரணத்தினால், சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருக்கிறார். மருத்துவர்களுக்கு இவர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால், அங்கு பணி புரிந்த ஊழியர்களில் சிலரும், நோயாளிகளின் உறவினர்களில் சிலரும் இவரை நடிகை என்று அடையாளம் கண்டுகொண்டனர்.

இப்போது சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்பிவிட்டார். அதற்குள் நடிகை ஒருவர் அனாதையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று சமூக தளங்களில் இவரது படத்தை போட்டு பலரும் பதிவிட்டனர்.

பிறகு ஷர்மிளாவை சில ஊடகங்கள் தொடர்பு கொண்டு பேசிய போது, இல்லாதவர்களுக்கு தானே அரசு மருத்துவமனை உள்ளது என்று நறுக்கென கூறியிருக்கிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sharmila took treatment in chennai government hospital

Next Story
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ஆர்யா-சாயிஷா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com