Advertisment

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து

Indian Railways: ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC, Irctc railways, irctc train booking, irctc advance booking, irctc booking, ஐஆர்சிடிசி புக்கிங், ஐஆர்சிடிசி, ரயில்கள் ரத்து, இந்தியன் ரயில்வே, Indian Railways

IRCTC: நாடு முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அனைத்தையும், ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில் பயணத்திற்கு தயாரா? . டிக்கெட் புக் பண்ண ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் ஆப் எது சிறந்தது?

இந்நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டன.

IRCTC Updates : ஐஆர்சிடிசி அறிவிப்பு

இந்நிலையில், அட்டவணைப்படி, ஜூன் 30ம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான, முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பி தரும்படி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மே 31 வரை சென்னைக்கு ரயில்கள், விமான சேவையை இயக்க வேண்டாம்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள், ஜூன் 30 வரை இயங்காது என தெரியவருகிறது. அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment