Amla recipe in tamil: நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். அப்படி ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நீங்கள் விரும்புவராக இருந்தால் இந்த குறிப்பு உங்களுக்குத்தான்.
இந்த எளிய குறிப்பில் வைட்டமின் சி நிரம்பி காணப்படும் நெல்லிக்காயில் எப்படி சுவையான வெரைட்டி ரைஸ் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நெல்லிக்காய் சாதம் - தேவையான பொருட்கள்
1 1/2 கப் - ஊறவைத்த பாசுமதி அரிசி
3 கப் + 1/4 கப் - தண்ணீர்
சுவைக்கு உப்பு
2 - நெல்லி துருவியது
1 1/2 தேக்கரண்டி - நல்லெண்ணெய்
1 தேக்கரண்டி - கடுகு விதைகள்
1/2 தேக்கரண்டி - சீரகம்
1/4 டீஸ்பூன் - பெருங்காயம்.
1 டீஸ்பூன் - தோல் இல்லாத உளுந்து
1 டீஸ்பூன் - கடலை பருப்பு
10-12-கறிவேப்பிலை
ஒரு சிட்டிகை - கசூரி மெத்தி தூள்
2-3-காய்ந்த சிவப்பு மிளகாய்
1/4 கப் - முந்திரி பருப்புகள்
1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
கொத்தமல்லி தழைகள்
நெல்லிக்காய் சாதம் செய்முறை
ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போடவும். நன்கு மிக்ஸ் செய்த பிறகு 10-12 நிமிடங்கள் சமைக்கவும்.
ஒரு கடாயில், எண்ணெய், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை கசூரி மேத்தி, சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து துருவிய நெல்லியைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் மஞ்சள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
பிறகு 1/4 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு-மூன்று நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் முன்பு வேகவைத்த அரிசி சாதத்தை சேர்த்துக்கொள்ளவும்.
அவற்றை நன்கு மிக்ஸ் செய்த பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“