ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகம் கொண்டிருக்கும் வைட்டமின் இ – நன்மைகள் என்னென்ன?

பசலைக் கீரையில் வைட்டமின் இ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

By: Updated: June 19, 2019, 02:59:01 PM

Antioxidant Vitamin E Benefits and Foods you should eat : ஆன்டி ஆக்ஸிடன்ட்களில் மிக முக்கியமானது வைட்டமின் இ. இதனாலேயே, இந்தக் காலத்தில் வைட்டமின் ஈ மிகவும் பிரபலம் ஆகிவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சருமம் ஆரோக்கியமாக இருக்க என பல விஷயங்களுக்கு முக்கியமாக விளங்குகிறது வைட்டமின் ஈ. தாவர எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் ஆல்பா டோகோப்பெரால் (Alpha tocopherol), ‘செயல்படும் வைட்டமின் இ’ என்று அழைக்கப்படுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து வைட்டமின் இ கிடைக்கிறது. கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், தேவைக்கு அதிகமானவை சேமித்துவைக்கப்படும்.
வைட்டமின் இ, செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நம் உடலில் செல்கள் ஜோடி ஜோடியாக இருக்கும், ஏதாவது ஒரு காரணியால் பாதிக்கப்பட்டு, செல்கள் உடையும்போது, அவை தனித்துவிடப்படும். இப்படித் தனித்துவிடப்படும் செல்களை வைட்டமின் இ கட்டுப்படுத்தும். இதனால், புற்றுநோய் செல்கள் வளருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

நன்மைகள்

தசைகளின் ஆரோக்கியத்துக்கும் செயல்பாட்டுக்கும் வைட்டமின் இ அவசியம். குறிப்பாக, இதயத் தசைகளின் ஆரோக்கியமான இயக்கத்துக்கு வைட்டமின் இ முக்கியப் பங்காற்றுகிறது. எலும்பு மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படத் துணைபுரிகிறது.

வைட்டமின் ஏ, கே, இரும்புச்சத்து, செலினியம் போன்றவை உடலில் சீராக சேமித்துவைக்க வைட்டமின் இ மறைமுகமாக உதவுகிறது.

இரத்த செல்கள் உருவாவதில் வைட்டமின் ஈ-க்கும் பங்கு இருக்கிறது.

பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் பங்காற்றுகிறது.

சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்க, வைட்டமின் இ துணைபுரிகிறது.

01) கோதுமை

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `இ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின்  ‘இ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையையும் உண்டாக்கும்.

02) பாதாம்

பாதாம் பருப்பில் நமது உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவை இருக்கின்றன. இருந்த போதிலும் பாதாம் பருப்பை அளவோடு தான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கும் என்பதால் அளவுக்கு மீறி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.

பாதாம் பருப்பில் கலோரிகளும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.

நம் உடலுக்கு சராசரியாக 15 மி கிராம் வைட்டமின் இ தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் இ உள்ளடங்கி இருக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக பாதாம் உட்கொள்ள கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் நமது உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.

பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி உட்கொள்ள கூடாது, மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது.

பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.

3)  சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று தின்னலாம். 100 கிராம் விதைகள் 584 கலோரி ஆற்றல் வழங்கவல்லது.

கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். ‘வைட்டமின்-இ’, சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது. 100 கிராம் விதையில் 35 கிராம் ‘வைட்டமின் இ’ உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும்.

4) வேர்க்கடலை

வேர்க்கடலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அதில் உள்ள வைட்டமின் இ தான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற அவநம்பிக்கை இருந்து வருகின்றது. ஆனால் இந்த வேர்க்கடலையில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.

வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் நம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் அமிலம் நம் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

வேர்க்கடலையில் அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் உள்ளது. இது மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது.

ஸ்நாக்ஸில் சிறந்ததாக இருக்கும் வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய வைட்டமின் இ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்.

5) கீரை

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் வைட்டமின் இ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கடுகுக் கீரையில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால், இதில் உள்ள முழு நன்மைகளையும் பெறலாம்.

மேலும் படிக்க : Food For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Antioxidant vitamin e benefits and foods you should eat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X