தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் உள்ளன. இதில், சுடச் சுட தயாராகும் ஆப்பத்திற்கென தனி ரசிகர்கள் உள்ளார்கள். அவற்றை சட்னி மற்றும் குருமாக்களுடன் சேர்த்து சுவைத்தால் அருமையாக இருக்கும். மேலும் இந்த மிருதுவான ஆப்பத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்படியான ஆப்பத்தில் எண்ணெய் சேர்ப்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடிக்காது. அதனால் அதற்கான மாற்று முறையை அதே சுவையில் கொடுக்க வேண்டும் என நாம் நினைப்பதுண்டு. அந்த வகையில், துளி எண்ணெய் இல்லாமல் ருசியான இன்ஸ்டன்ட் ஆப்பம் எப்படி தயார் செய்து அசத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.

5 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஆப்பம் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஊறவைத்த அவல், ரவை, தயிர், உப்பு, சிறிது தண்ணீர் எடுத்து நன்றாக கலக்கவும்.
பிறகு அவற்றை சிறிது நேரம் தனியாக ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்தக் கலவையை எடுத்து கிரைண்டரில் சேர்த்து மென்மையான பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
நீங்கள் ஆப்பம் சமைக்க தயார் ஆவதற்கு முன், ஒரு தேக்கரண்டி பழ உப்பு (Fruit salt) சேர்க்கவும். இது ஆப்பம் பஞ்சுபோன்றதாக இருக்க உதவுகிறது.
தொடர்ந்து சூடான நான்-ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு கரண்டியை ஊற்றி சமைக்க ஆரம்பிக்கவும்.
அவை பழுப்பு நிறமாக மாறத் தொடங்கியதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து, உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து சுவைத்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“