Tamil Serial News: சினிமா வில்லி என்றால் எப்படி ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் நினைவுக்கு வருமோ, அந்த மாதிரி சீரியல் வில்லி என்றால் ராணி நிச்சயம் நினைவுக்கு வருவார்.

பாலா நிழலில் இருக்கும் ஷிவானி இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?
இப்போது இருக்கும் பல வில்லி நடிகைகளும், சீரியலில் ராணியை பின்பற்றுகிறார்கள். ஆனால் யாரையும் பின்பற்றாமல், தானே ஒரு பாணியை கட்டமைத்தார் ராணி. சிகரம் சீரியலில் அறிமுகமான ராணி, கவிதாலயா தயாரிப்பில் இரவு நேர பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பான ’அலைகள்’ சீரியலில் வில்லியாக கவனிக்கப்பட்டார். பின்னர் இவரின் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என்று தொடர்ந்தது. வில்லி தோற்றத்தில் புதிய அத்தியாயத்தையே உருவாக்கியவர் ராணி.

தனது சினிமா அறிமுகம் குறித்து, ’நான் ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். அப்பா ஆனந்த், மாற்று மொழிப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து புகழ்பெற்றார். அப்பா சினிமாவில் இருந்ததால், எனக்கு சைல்டு ஆர்டிஸ்டா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்த காலத்திலிருந்து ஒன்பதாவது படிக்கிற வரை ஐம்பதுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்ஸ்டிஸ்டா நடிச்சுட்டேன்’ என முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.
சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி என அவர் ஒவ்வொரு சீரியலில் நடிக்கும் போதும், அந்த சீரியலின் பெயர் ராணிக்கு அடைமொழியாக வந்து விடும். அவர் மிரட்டுவதும்,பேசுவதும், பாடி லாங்குவேஜும் அனைவரையும் கவர்ந்திழுத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமுருகனின் ‘குலதெய்வம்’ சீரியலில், பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படு வில்லத்தனமாக ராணியை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு அது திருப்தியை தரவில்லை.

’அவனை நம்பவே கூடாது’ ஆரியை தாக்கிய பாலாஜி
தொடர்ந்து பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகி கதாபாத்திரம், ரோஜா சீரியலில் சந்திரகாந்தா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம், வள்ளி சீரியலில் இந்திர சேனா கதாபாத்திரம் என்று நடித்து வெளுத்து வாங்குகிறார். தனக்கு நீண்ட தலை முடி இருந்ததாகவும், அதனை ‘அலைகள்’ சீரியலுக்காக வெட்டிக் கொண்டதும், அதை கே.பி சார் நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்ந்த ராணி, அவர் சொன்னதாலேயே, இன்று வரை முடியை வளர்க்க ஆசைப்படவில்லை, என முன்பொரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”