பிரசவத்திற்குப் பின்பு பெண்களுக்கு அதிகளவில் உபயோகமாக இருக்கும் மூலிகைகளில் சதாவரி முக்கிய பங்கு வகிக்கிறது. இது, ஆயுர்வேத மூலிகைகளின் ராணியாக கருதப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூலிகையாகும். மேலும், மாதவிடாய் சுழற்சியின் காலத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுழற்சி மற்றும் இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. பெண்களுக்குப் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
'100 வேர்களைக் கொண்ட மூலிகை' என அழைக்கப்படும் சதாவரி குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவாசரை அணுகினோம். அவரிடம், இது ஏன் தாய்மார்களுக்கு அவசியம் என்பதையும், பெண்கள் மற்றும் ஆண்கள் பொது ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவை என்பதையும் கேட்டறிந்தோம்
அப்போது பேசிய அவர், "பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்/ஹார்மோன்களில் ஊட்டச்சத்து அதிகரிப்பது மற்றும் சுத்தம் படுத்துதல் காரணமாக இந்த மூலிகை பெண்களின் பெஸ்ட் பிரண்ஸாக கருதப்படுகிறது. இது அவர்களது வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் (மாதவிடாய் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை) துணையாக இருக்கிறது.
சுவை எப்படி இருக்கும்?
சதாவரியின் சுவையைப் பொறுத்தவரை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். உடலிலும் மனதிலும் வாடா மற்றும் பிட்டா என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படும் உயிர் ஆற்றலை சமநிலைப்படுத்துகிறது. பல்வேறு பண்புகள் காரணமாக, இது சிறந்த ரசாயன்/அடாப்டோஜன் அல்லது புத்துணர்ச்சியூட்டும் மூலிகைகளில் ஒன்றாக திகழ்கிறது.
சதாவரி மூலிகையின் பலன்கள்:
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கிறது
மாதவிடாயின் போது இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது
கரு உருவாகுதல் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது. இது குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன் இருப்பதால், மாதவிடாய் நின்ற காலத்தில் மனநிலை மாற்றங்களைக் குறைக்க உதவுகிறது.
கோபம் மற்றும் எரிச்சலை தணிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
இயற்கையில் குளிர்ச்சியாக இருப்பதால், வோர்க்-அவுட் செய்யும் போது ஏற்படும் சோர்வை தணிக்கிறது.
வீக்கம், அதிக ரத்தப்போக்கு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் சிறந்த மூலிகை ஆகும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
சதாவரியை பாலுடன் உட்கொள்வது சிறந்தது ஆகும். "படுக்கும் முன்பு சூடான பாலில் அரை டீஸ்பூன் அளவில் சதாவரியை சேர்ந்து சாப்பிட்டால் போதும், அதன் மாயாஜாலத்தை காண்பீர்கள்" என மருத்துவர் கூறினார்.
ஆண்களுக்கு என்ன பயன்?
இது விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு, விந்து தரம் மற்றும் அளவை மேம்படுத்துகிறது. இது தம்பதியினருக்கு (ஆண் - பெண் இருவருக்கும்) கருவுறுதலை மேம்படுத்த ஒரு மருத்துவரின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக அமைகிறது என மருத்துவர் பாயாஸ் தெரிவித்தார்.
இத்தகைய அற்புதங்கள் நிறைந்த மூலிகையை மிஸ் செய்ய போறீங்களா!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.