வாழை இலையை அரைத்து… இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு. இது சுகாதாரமானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதையும் தாண்டி, வாழை இலையில் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக, வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

  • சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
  • வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டியாக்கி அதனை சருமத்தில் தேய்த்தால் சருமம் மென்மையடையும்
  • வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளதால், அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும்.
  • வாழையிலையில் அதிக அளவு காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து உதவுகின்றன.
  • வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும் என சொல்லப்படுகிறது.
  • வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.

இயல்பாகவே தூய்மையானதாகவும், ஆரோக்கியக்கூறுகளை உள்ளடக்கிய வாழை இலையை, லேசாக நீரைத் தெளித்துவிட்டே பயன்படுத்தலாம். வாழை இலை சுத்தமாக இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை. நச்சுப்பொருள்களோ, வேதிப்பொருள்கள் கலப்போ இல்லை. நீர்ப்புகாத் தன்மையுடையதாக இருப்பதால், இதில் குழம்பு, ரசம் போன்ற திரவ உணவுகளையும் பரிமாற முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Banana leaf health benefits for skin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express