தொப்பை, சுகர் பிரச்னை… பாட்டி சொன்ன வெந்தயம் பற்றி சயின்ஸும் சொல்லுது!

Fenugreek for weight loss in tamil:- 2015ம் ஆண்டு சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையுயில், தினசரி 10 கிராம் வெந்தயம் விதைகளை சூடான நீரில் ஊறவைத்து பருகினால், டைப் - 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது

Fenugreek for weight loss in tamil:- 2015ம் ஆண்டு சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையுயில், தினசரி 10 கிராம் வெந்தயம் விதைகளை சூடான நீரில் ஊறவைத்து பருகினால், டைப் - 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
benefits of Fenugreek in tamil: venthayam benefits

Health benefits of Fenugreek Tamil News: நாம் பல மணிநேர தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், கலோரிகளை கட்டுப்படுத்தப்பட்ட சில குறிப்பிட்ட உணவுகளை உண்டும் எடையை குறைக்க தினதோறும் போராடி வருகிறோம். ஆனால் நமது சமையில் அறையில் உள்ள சில மூலிகைகள் உடலின் செரிமானத்தை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடை இழப்பை துரிதப்படுத்தவும் உதவுகின்றன.

Advertisment

அந்த அற்புதமான மூலிகைகளை நாம் சரியான அளவுகளில் பயன்படுத்தப்படும்போது கண்டிப்பாக உடலில் மாற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக வெந்தயம் (மெதி), சக்திவாய்ந்த இயற்கை மூலப்பொருள். இது தொப்பை கொழுப்பு மற்றும் பிற கொழுப்பு திசுக்களை எரிக்கும் தூண்டு சக்தியாக இருக்கிறது. மேலும், வெந்தயம் அல்லது வெந்தயம் தூள் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் விரைவாக எடை குறையும் என்று நம்பப்படுகிறது.

வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்காக, 2015 ஆம் ஆண்டு சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையுயில், தினசரி 10 கிராம் வெந்தயம் விதைகளை சூடான நீரில் ஊறவைத்து பருகினால், வகை -2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் வெந்தய தண்ணீரில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெந்தயத்தை உட்கொள்வதற்கான சிறந்த வழி எது?

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு நான்றாக ஊற வைக்கவும். பின்னர் எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டவும், இப்போது உங்கள் சூடான தேநீரை அனுபவிக்கவும்.

வெந்தயத்தின் நன்மைகள்:

Advertisment
Advertisements
publive-image
  • வெந்தய விதைகளில் நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்தை குறைக்க உதவுகிறது. உங்கள் உடல் சர்க்கரையை உறிஞ்சும் வீதத்தை குறைப்பதோடு, உங்கள் உடல் வெளியிடும் இன்சுலின் அளவையும் அதிகரிக்கிறது.
  • இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளாக அறியப்படும் 4-ஹைட்ராக்ஸிஸ்லூசின் எனப்படும் அமினோ அமிலம் இருப்பதால் டைப் -2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் இன்சுலின் சுரப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
  • வெந்தயம் விதைகளில் காணப்படும் நீரில் கரையக்கூடிய நார் கலெக்டோமன்னன், முழுமையின் உணர்வை அதிகரிப்பதன் மூலம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கேலக்டோமன்னன் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள கொழுப்பு எரியும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
  • வெந்தயம் விதைகளை ஒட்டுமொத்தமாக உட்கொள்ளலாம் அல்லது தூள் வடிவில் உணவுகளில் ஒரு சுவையூட்டும் முகவராகப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான தேநீர் தயாரிக்க வெந்தய தூளையும் பயன்படுத்தலாம்.

புளி சாஸில் செய்யும் வெந்தயம் ஊறுகாயின் செய்முறை இங்கே வழங்ப்பட்டுள்ளது அதை நீங்கள் முயற்சி செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

1,500 கிராம் – வெந்தயம் முளைகள் (500 கிராம் விதைகளிலிருந்து பெறப்படுகின்றன)

25 கிராம் – சுவையூட்டுவதற்கு கடுகு விதைகள்

750 கிராம் – புளி சுத்தம், தண்ணீரைப் பயன்படுத்தி தடிமனான சாற்றைப் பெறுங்கள்

125 கிராம் – அரைத்த வெல்லம்

400 கிராம் – மிளகாய் தூள்

25 கிராம் – மஞ்சள் தூள்

10 கிராம் – அசாஃபோடிடா, எண்ணெய் மற்றும் தூளில் வறுக்கவும்

500 கிராம் – உப்பு

750 மிலி – எண்ணெய்

publive-image

நீங்கள் செய்ய வேண்டியவை:

  • வெந்தயம் முளைகளை குறைந்த வெப்பத்தில் சரியாக 2 நிமிடங்கள் மட்டும் வறுக்கவும். இவற்றை நீண்ட நேரம் வறுத்தால் முளைகள் கசப்பாகி விடும்.
  • அதே வாணலியில், இன்னும் கொஞ்சம் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்க்கவும். பின்னர் அதை வெடிக்க விடவும்.
  • புளி சாறு, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும்.
  • கெட்டியாக வருவதற்கு கொஞ்சம் அனலை அதிக படுத்தவும்.
  • வெப்பத்தை குறைத்து, மிளகாய், மஞ்சள், அஸ்ஃபோடிடா பொடிகள் போன்றவற்றை மற்றும் மீதமுள்ள எண்ணெயில் கொட்டி கிளறவும்.
  • கலவை கெட்டியாகும் வரை சுமார் 45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின்னர் வறுத்த முளைகளை சேர்த்து, கலவை ஜாம் போன்றதாக மாறி எண்ணெய் பிரியும் வரை 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • இப்போது நீங்கள் எதிர்பார்த்த வெந்தய ஊறுகாய் பயன்படுத்த தயாராக இருக்கும். இதை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Lifestyle Update Healthy Food Tips Tamil Health Tips Lifestyle Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: