காலையில் தயிர்- வாழைப் பழம்: அற்புதமான 5 பயன்கள் இருக்கு!

Top Benefits of Having Curd and Banana For Breakfast in tamil: காலையில் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சத்தான இயற்கை உணவுகளை தெரிவு செய்து உண்ணும் பழக்கம் அவசியம்.

Best Breakfast foods tamil: Curd and Banana, from Weight management to High energy

Best Breakfast foods tamil: காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக உள்ளது. அவற்றை நாம் எடுத்துக்கொள்ள தவறும் போது சோர்வு, தலைசுற்றல், மயக்கம் போன்றவையும், உடல் ரீதியாக பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே, காலை உணவை நாம் தவிர்க்கக் கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், காலையில் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சத்தான இயற்கை உணவுகளை தெரிவு செய்து உண்ணும் பழக்கம் அவசியம் என்றும் கூறுகிறார்கள். அந்த வகையில், தயிர் – வாழைப்பழம் மிக்ஸ் செய்த கலவை உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்க செய்கிறது.

மிகக் குறைவான தயாரிப்பு நேரமும் தேவைப்படும் இந்த அற்புத உணவில் சேர்க்கப்படும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி-6, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும், தயிரில் புரதம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் சரியான அளவில் நிரம்பியுள்ளன. எனவே, இந்த ஊட்டச்சத்துக்களுடன் உங்கள் நாளை தொடங்கினால் பல அம்சங்களில் நன்மை பயக்கும்.

தயிர் மற்றும் வாழைப்பழம்

இப்படி ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் நிரம்பியுள்ள இந்த உணவை உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

தயிர் மற்றும் வாழைப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

எடை மேலாண்மை

வாழைப்பழம் மற்றும் தயிர் இரண்டிலும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவாக உடல் கொழுப்பை வேகமாக எரிக்க முடிகிறது. மேலும், இயற்கை நன்மைகள் நிரம்பியுள்ள இந்த உணவை உங்கள் காலை உணவாக சாப்பிட்டால், ஜங்க் உணவுகளுக்கு நீங்கள் ஏங்காமல் இருப்பீர்கள்.

தயிர் மற்றும் வாழைப்பழம்

எலும்புகளை வலுவாக்கும்

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் இருந்து கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது வலுவான எலும்புகள் மற்றும் குறைவான மூட்டு வலிகளுக்கு வழிவகுக்கிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசைகளை தளர்த்த உதவுகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள சோடியம் தசை சுருக்கத்தை உருவாக்குகிறது. எனவே இவற்றின் கலவையானது அடிப்படை சமநிலைச் செயலைச் செய்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உயிரணுக்களுக்குக் கொண்டு செல்லவும் உதவுகிறது.

தயிர் மற்றும் வாழைப்பழம்

கூடுதலாக, வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் உள்ளடக்கம் நரம்பியக்கடத்தி செரோடோனின் ஆக மாற்றப்படுகிறது. இது உடலை ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் ஒரு நபரின் மனநிலையை நன்கு உயர்த்துகிறது.

மலச்சிக்கலில் இருந்து விடுதலை

காலையில் தெளிவான மற்றும் சுத்தமான வயிற்றை விட சிறந்தது எதுவுமில்லை. வாழைப்பழத்தின் நார்ச்சத்து மற்றும் தயிர் நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. இது மலச்சிக்கலுடன் போராடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவுகிறது.

அதிக ஆற்றல்

இந்த அற்புத கலவையானது கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் வளமான மூலமாகும். ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவு உங்களின் ஆற்றல் மட்டங்களை உடனடியாக இது உயர்த்தும்.

தயிர் மற்றும் வாழைப்பழம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best breakfast foods tamil curd and banana from weight management to high energy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com